ஆசிரியர் இடமாற்றங்களை மீளாய்வுசெய்யுமாறு போரதீவுப்பற்றில் தீர்மானம்

மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து பதலீடுகள் இல்லாமல் இடமாற்றம்செய்யப்பட்ட ஆசிரிய இடமாற்றங்களை மீளாய்வுசெய்து மீண்டும் அவர்களை பழைய பகுதிகளில் கடமையாற்ற அனுமதிக்குமாறு கோரும் பிரேரணை ஒன்று நேற்று திங்கட்கிழமை வெல்லாவெளியில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கும் கல்வித்திணைக்களத்துக்கும் அனுப்பிவைக்குமாறும் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் 2016ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திக்குழு கூட்டம் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் மற்றும் மா.நடராஜா ஆகியோரினால் பட்டிருப்பு வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் காரசாரமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

பதிலீகள் இன்றி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது மாகாணசபை உறுப்பினர்களினால் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

எனினும் திணைக்களத்தினால் கோரப்பட்டதற்கு அமைவாகவே இடமாற்றம் தொடர்பான பெயர்பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டதாக இதன்போது பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்தினால் இங்கு தெரிவிக்கப்பட்டது.

எனினும் ஆசிரியர் பதிலீடுகள் இன்றி மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை ஆராய்ந்து மீண்டும் அவர்களை பழைய இடங்களில்சேவையாற்ற நடவடிக்கையெடுக்குமாறு பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைமைகளான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள போரதீவுப்பற்று கல்வி கோட்டத்தில் இதுவரையில் ஒரு 01ஏபி பாடசாலையை முடியாமைக்கான காரணம் என்ன எனவும் அதிகாரிகள் இது தொடர்பில் அக்கறை செலுத்தவில்லையெனவும் இங்கு கருத்துதெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.

மிகவும் பின்தங்கியதும் அடிப்படை வசதிகள் அற்றதுமான இப்பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் சாதாரண தரத்தில் சிறந்த பெருபேறுகளைப்பெறும்போது உயர்கல்வியை பெறுவதற்காக எழுவான்கரைக்கு செல்லவேண்டிய நிலையே இருந்துவருகின்றது.

இதுவரையில் இப்பகுதியில் ஒரு 01ஏபி பாடசாலையை உருவாக்குவதற்கான எதுவித நடவடிக்கையும் கல்வி அதிகாரிகள் எடுக்கவில்லை.இதுமிகவும் வேதனைக்குரியவிடயமாகும்.இது தொடர்பில் உhயி அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு கோரிக்கை விடுத்தார்.

இதன்போது போரதீவுப்பற்றில் ஒரு 01ஏபி பாடசாலையை அமைப்பதற்கான நடவடிக்கையினை எடுத்து அதனை உரிய அமைச்சுக்கும் திணைக்களத்திற்கும் அனுப்பகைவ்கவும் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.