பட்டிப்பளையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் 200 வீடுகள் அமைக்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் 200 வீடுகளை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச அபிவிருத்துக்குழுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் இணைத்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

வடகிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக அரசாங்க பிரதிநிதிகளும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் இணைந்து நடாத்திய முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இதுவாகும்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,பட்டிப்பளை பிரதேச செயலாளர் த.டினேஸ் உட்பட தினைக்களங்களின் அதிகாரிகள்,பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பட்டிப்பளை பிரதேசத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகள் தொடர்பில் மீளாய்வுசெய்யப்பட்டதுடன் 2016ஆம் ஆண்டுமேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்த ஆண்டு கிராம இராஜியம் திட்டத்தின் கீழ் 24மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் 24 திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட சுமார் 15மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

ஆத்துடன் திவிநெகு,கமநெகும,புறநெகு உட்பட பிரதேசத்தில் திணைக்கள ரீதியாகவும் அரசார்பற்று நிறுவனங்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்பிரும் அரசாங்க அமைச்சர் ஒருவரும் இணைந்து நடாத்திய முதல் அபிவிருத்திக்குழு கூட்டமாக இது கருதப்படுகின்றுது.