மலேசியாவில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு அணி சாதனைபடைத்து இலங்கைக்கு பெருமை சேர்த்தது

மலேசியாவில் நடைபெற்ற கபடிச்சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திச்சென்ற மட்டக்களப்பினை சேர்ந்த அணி மூன்றாவது இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளது.
மலேசியாவில் நகரங்களுக்கிடையிலான கபடிச்சுற்றுப்போட்டி நடைபெற்றதுடன் இதில் இலங்கை,இந்தியா,பங்களாதேஸ்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அணிகள் பங்குகொண்டன.

இலங்கையில் இருந்து நான்கு அணிகள் பங்குகொண்டதுடன் இதில் கிழக்கு மாகாணத்தில் இருந்து மட்டக்களப்பு கபடி அணி பங்குகொண்டது.

இந்த சுற்றுப்போட்டியில் முதல் மூன்று இடங்களை இலங்கை பெற்றுக்கொண்டதுடன் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்திச்சென்ற அணி மூன்றாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது.

நான்காம் இடத்தினை இந்திய அணியும் ஐந்தாம் இடத்தினை பாகிஸ்தான் அணியும் பெற்றுக்கொண்டது.

தேசிய ரீதியாவும் ஆசியா ரீதியிலும் பல போட்டிகளில் பங்குகொண்டு மட்டக்களப்புக்கு இந்த கபடி அணி பெருமை சேர்த்ததுடன் பல வெற்றிவாய்ப்புகளையும் இலங்கைக்கு கடந்த காலத்தில் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்ந்த மட்டக்களப்பு வீரர்களுக்கு மட்டு நியூஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.