வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி அமைப்பினால் நடத்தப்பட்ட சித்திரைப் புதுவருட விளையாட்டு நிகழ்வுகள்

(லியோ)

தமிழ் – சிங்கள  சித்திரை  புதுவருடத்தை  முன்னிட்டு  வாழ்வின் எழுச்சி  சமுதாய அடிப்படை வங்கி அமைப்பினால் சம்பிரதாய பூர்வமாக நாடளாவிய ரீதியில் சுமார் 1074 வங்கிகளில் ஒரே நாளில் கிராமிய விளையாட்டு நிகழ்வுகள்  நடத்தப்பட்டன.

 இதனுடன் இணைந்ததாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாழ்வின் எழுச்சி  சமுதாய அடிப்படை வங்கிகளில்  2016 ஆம் ஆண்டு  தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வை முன்னிட்டு கிராமிய பாரம்பரிய கலாசார   விளையாட்டு நிகழ்வுகள் நேற்று மாலை இடம்பெற்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக  வலய  வாழ்வின் எழுச்சி  சமுதாய அடிப்படை வங்கிகளான இருதயபுரம் – இருதயபுரம் கிழக்கு ஆகிய வங்கி முகாமையாளர்களின் தலைமையில்  நடத்தப்பட்ட சித்திரை புதுவருட பாரம்பரிய  கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்   நேற்று மாலை  திராய்மடு மற்றும் சீலாமுனை கிராம  விளையாட்டு மைதானங்களில் இடம்பெற்றது .

இடம்பெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வில் பாரம்பரிய  கலாசார விளையாட்டு நிகழ்வாக கயிறு இழுத்தல் போட்டி , ஊசிக்கு நூல் கோர்த்தல் ,தலையணை சமர் , முட்டி உடைத்தல் , வினோத உடை போட்டி என பல பாரம்பரிய கலாசார வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .

இடம்பெற்ற விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற அனைவருக்கும்  பரிசில்களும் வழங்கப்பட்டன .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  செயலக திவிநெகும  இணைப்பாளர் ஜே .எப்f . மனோகிதராஜ் , மண்முனை வடக்கு பிரதேச செயலக திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர்  திருமதி . என் . கிரிதராஜா , தலைமையக முகாமையாளர் திருமதி . கே . வாமதேவன் , வங்கி முகாமையாளர்களான  திருமதி .குமுதினி இருதயதாசன் , செல்வி .பாலசுந்தரம் சாமினி, மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , வலய வங்கி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி பயனாளிகள் மற்றும்  சிறுவர்கள் என பலர் கலந்து சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தனர் .