ஏறாவூர் பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வு

(லியோ)


ஏறாவூர் பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது .

.
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம் மற்றும்  வாசம் உதவும் உறவுகள் அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட சாதனையாளர் பாராட்டு விழா நிகழ்வுகள்   பாடசாலை அதிபர்.க . சிறிதரன் தலைமையில் இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில்  ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை , கல்விப் பொது சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் , பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து வாசம் உதவும் உறவுகள் அமைப்பினால் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர்  .உ .உதயஸ்ரீதர்,  பாடசாலை அதிபர். க . சிறிதரன்  மற்றும் பிரதி அதிபர் பகிரதன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர்  .உ .உதயஸ்ரீதர், சிறப்பு அதிதியாக  ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் . பாலசுப்பிரமணியம்  கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் . எஸ் .அருள்மொழி , மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர்  . வீ .முரளிதரன்  மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் உறுப்பினர்கள்  ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .