ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இரவுச் சந்தை இன்று ஆரம்பம்

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் சந்தைப் பாலம் (டீசனைபந அயசமநவ) ஆரம்பிக்கிறது.

இந்த ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் இரவு சந்தை இன்று வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் மாலை 6.30மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

வேர்ள்ட் விஷன், ஒக்ஸ்பாம், ஜனதாக்ஸன் ஆகிய நிறுவனங்களுடன் மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து சந்தைப் பாலம் (டீசனைபந அயசமநவ) எனும் 52ஆவது நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கின்றன.
இந்தத் திட்டம் உள்ளுர் உற்பத்தியாளர்களின் வருமானத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு பொது மக்களின் அமோக வரவேற்பினையும் பெற்றுள்ளதாக ஜனதாக்ஸன் நிறுவனம் கூறுகின்றது.

மேலும் சந்தைப் பாலத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு அடுத்த கட்ட முன்னெடுப்பாக டீசனைபந அயசமநவ அதன் வலைத்தளத்தையும் இன்று 8ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கின்றது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சறோஜினிதேவி சார்ள்ஸ்,  மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன்;, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் உட்பட முக்கி;யஸ்தர்களும் சமூக ஆர்வலர்களும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் நாளை 09.04.2016 சனிக்கிழமை மாலை 6.45  மணியிலிருந்து இரவு 7.00 மணி வரை, இரவு 7.45 இல் இருந்து 8.00 மணி வரை, இரவு 8.45 இருந்து 9.00 மணி வரை ஆகிய நேர அட்டவணையில் சூழல் நேய வீடுகளை அமைப்பதன் ஊடாக பசுமை நகரை விருத்தி செய்ய உதவுவோம், கழிவு முகாமைத்துவம், வினைத் திறனான சக்திப் பாவினை, மற்றும் கட்டுமானப் பாதுகாப்பு ஆகிய விடயதானங்களில் விழிப்புணர்வூட்டல்கள் இடம்பெறவுள்ளன.