.இ. போ. ச. கிழக்குப் பிராந்திய போக்குவரத்துச் சபைக்கான உள்ளகக்கணக் காய்வு தொடர்பான கலந்துரையாடல்

( லியோ )

இலங்கைப் போக்குவரத்துச் சபையின்  கிழக்குப் பிராந்திய  போக்குவரத்துச் சபைக்கான  உள்ளகக்கணக் காய்வு தொடர்பான கலந்துரையாடல்   மட்டக்களப்பில் இடம்பெற்றது
.இலங்கைப் போக்குவரத்துச் சபையின்  கிழக்குப் பிராந்திய  போக்குவரத்துச் சபையின் உள்ளகக்கணக் காய்வுப் பகுதியினரால் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட உள்ளகக் கணக்காய்வு சம்பந்தமான கலந்துரையாடல்களும் மற்றும் கணக்காய்வுகளும் 27.04.2016  புதன்கிழமை மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது .

இடம்பெற்ற  கலந்துரையாடலில்  பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர். பி .டி. பாலசூரிய , பிரதான உள்ளக கணக்காய்வாளர் திருமதி . டி .ஆர் .எஸ் . மெனிக்கே , பிராதான பிராந்திய முகாமையாளர் . எ .எல் . சித்திக் , ,பிராந்திய செயலாற்று முகாமையாளர் .. எஸ் . கனகசுந்தரம் ,பிராந்திய உள்ளகக் கணக்காய்வாளர் . எம் .டி . எம் . இஸ்மாயில் மற்றும்  இலங்கைப் போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகள் .,சாலை முகாமையாளர்கள் , உதவி முகாமையாளர்கள் , உலகக் கணக்காய்வு  உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .