முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை மதித்து வழங்கப்படும் அடையாளக் கொடுப்பனவே தவிர சேவைக்கான கொடுப்பனவு அல்ல ( PHOTOS & VIDEO )

(லியோ)

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவையை மதித்து வழங்கப்படும் அடையாளக் கொடுப்பனவே தவிர இது  அவர்களின் சேவைக்கான கொடுப்பனவு அல்ல என மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பாலர் பாடசாலை  ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும்  ஆரம்ப 
நிகழ்வில் இவ்வாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர்   தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பாலர் பாடசாலை  ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும்  ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பில்  இடம்பெற்றது .

கிழக்குமாகாண கல்வி அமைச்சு ,  பாலர் பாடசாலைக் கல்விப் பணியக மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அனுசரணையுடன் நடத்தப்பட்ட  மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு கிழக்குமாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தவிசாளர் பொன் செல்வநாயகம் தலைமையில்  மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு  மாவட்டத்தில்  முன்பள்ளி  ஆசிரியர்களாக கடமைபுரியும்  சுமார்  1143  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 3000  ரூபா வீதம் கடந்த மூன்று மாதத்திற்கான கொடுப்பனவாக ஒன்பதாயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள்  வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்குமாகாண கல்வி அமைச்சர் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவையை மதித்து வழங்கப்படும் அடையாளக் கொடுப்பனவே தவிர இது  அவர்களின் சேவைக்கான கொடுப்பனவு அல்ல, முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை மதித்து அதற்கான அங்கிகாரமாகவே இந்த மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குகின்றோம்.

இந்தக் கொடுப்பனவை கிழக்குமாகாண சபையினால் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு பல சவால்களுக்கு மத்தியிலேயே   வழங்க முடிகின்றது   .
மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் 1,143 பேருக்கும் திருகோணமலையில் 863 பேருக்கும்  அம்பாறையில் 1301 பேருக்கும்  இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 3,000 ரூபாய் படி ஜனவரி, பெப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான கொடுப்பனவே வழங்கப்படுகிறது என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர்   தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கிழக்குமாகாண முதலமைச்சர்  நசீர் அகமட் , கிழக்குமாகாண கல்வி ,தொழில்நுட்பக்கல்வி , முன்பள்ளிக்  கல்வி , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டு ,இளைஞர் விவகாரம் ,புனர்வாழ்வு ,மீள்குடியேற்ற அமைச்சர்  சி . தண்டாயுதபாணி ,  ,விசேட அதிதியாக கிழக்கு மாகாண சபை தவிசாளர் என் .இந்திரகுமார் பிரசன்னா , கௌரவ அதிதிகளாக  மாகாணசபை உறுப்பினர்களான   இரா . துறைரெத்தினம் , கோவிந்தன் கருணாகரன் , எ. டி . முகமட்  ஷிப்லிபாருக், ஞா . கிருஷ்ணபிள்ளை , எம் . நடராஜா , சிறப்பு அதிதிகளாக  மாவட்ட உள்ளுராட்சி  உதவி ஆணையாளர்  கே . சித்திரவேல் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா , மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி   அலுவலக அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .