மட்டக்களப்பு மாவட்டத்தின் வாவிகரைகளில் இருக்கின்ற இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் - மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள்

(லியோ)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  இருக்கின்ற மூன்று வாவிகளை நிர்வாகம் செய்வது மற்றும் திட்டமிடல்  சம்பந்தமான நிலையான களப்புக்கள் மற்றும் வாழ்வாதாரம் திட்டம் தொடர்பாக களப்பு மீனவர்கள் ஒன்றிணைந்த நல்லாட்சி  குழு கூட்டத்தின் போது இவ்வாறு அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்தார் .
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 1996 ஆம் ஆண்டு 2ஆம் இலக்க கடற்தொழில் மற்றும் நீரியல் வளசட்டம்  மற்றும் 2013 ஆம் ஆண்டு 35ஆம் இலக்க கடற்தொழில் மற்றும் நீரியல் வள திருத்தச் சட்டத்தின் 31 மற்றும் 32 ஆம்  பிரிவிற்கேற்ப  மட்டக்களப்பு மாவட்ட களப்பு மீனவர் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாவட்ட  களப்பு மீனவர்   ஒன்றிணைந்த நல்லாட்சி குழு கூட்டம்  இடம்பெற்றது .

மட்டக்களப்பு மாவட்டத்தில்   இருக்கின்ற மூன்று வாவிகளை நிர்வாகம் செய்வது மற்றும் திட்டமிடல்  சம்பந்தமான நிலையான களப்புக்கள் மற்றும் வாழ்வாதாரம் திட்டம் தொடர்பாக களப்பு மீனவர்கள் ஒன்றிணைந்த நல்லாட்சி  குழு கூட்டம்  கடற்தொழில் நீரியல்வள பணிப்பாளர் நாயகம் கிறிஸ்டி லால் பெனாண்டோ தலைமையில்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .

 மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மூன்று வாவிகள் சம்பந்தமாக அவற்றை நிர்வாகம் செய்வதும் மற்றும் திட்டமிடல் குழு கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர்  சுற்றிகாட்டுகையில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை வளங்களாக காணப்படுகின்ற இந்த வாவிகளை பாதுகாத்தலும் அவற்றின் ஊடாக வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற நோக்கத்திற்காக பல வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது .

இந்நிலையில் மிக முக்கியமான விடயமாக வாவிக்கரை பகுதியில்  ஆக்கிரமிக்கப்பட்டு  கொண்டிருக்கும் ஒரு விடயமா இருக்கின்றது .

இது சம்பந்தமாக மக்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து  போது கடந்த காலங்களில் ஏற்பட்ட சில இடப்பெயர்வுகள் காரணமாக மக்கள் அந்த பகுதிகளை ஆக்கிரமிக்கின்ற ஒரு செயல்பாடுகளாகவே  நடைபெற்றுக்கொண்டிருகின்றது .

அதை விட இந்த மாவட்டத்தில் இயற்கையாக கருதப்படுகின்ற கண்டல் தாவரங்களை வளர்ந்திருக்கின்ற பகுதிகளுக்கு பலர் இப்போது காணி ஆவணங்களை சமர்பித்துகொண்டிருகின்றார்கள் .

இது எங்களுக்கு ஒரு சவலாக விடயமாக இருக்கின்றது .

மட்டக்களப்பு சத்துருகொண்டான் பகுதி சிறந்த வாவிகளாக இனங்காணப் பட்ட போதிலும்  அதற்கு பல தனி நபர்கள் ஆவணங்களை கொண்டிருகிறார்கள் .இது சம்பந்தமான வழக்குகள் நீதி மன்றத்தில் நடைபெற்றுகொண்டிருகின்றது .

எனவே இப்படியான சில விடயங்களை இந்த நீரியல்வள திணைக்களம் கவனத்தில்  எடுக்க வேண்டும் .காரணம் இது எமது அதிகாரத்துக்கு அப்பால் பட்ட விடயமாக இருக்கின்றது .

எனவே மட்டக்களப்பு உள்ள மூன்று வாவிகரைகளில் இருக்கின்ற இயற்கை வளங்களை பாதுகாக்க கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார் .

இன்று இடம்பெற்ற களப்பு மீனவர்கள் ஒன்றிணைந்த நல்லாட்சி  குழு கூட்டத்தில்   கிழக்கு மாகாண கடற்தொழில் நீரியல்வள பணிப்பாளர்  எஸ் .சுதாகரன் , மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள உதவி பணிப்பாளர் ருக்சான் குருஸ் , பாம் பவுண்டேசன் பணிப்பாளர்  சுனில்  தொம்பே பொல மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் , மாவட்ட பிரதேச செயலக அதிகாரிகள் , மாவட்ட மீனவ சங்க குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .