News Update :
Home » » மிஷனரிமார் சமயத்தை பரப்புவதில் மட்டுமல்ல கல்விச்சாலைகளையும் , வைத்தியசாலைகளையும் நிருவித்து மக்களுக்கு அரும்பணி செய்ததார்கள்

மிஷனரிமார் சமயத்தை பரப்புவதில் மட்டுமல்ல கல்விச்சாலைகளையும் , வைத்தியசாலைகளையும் நிருவித்து மக்களுக்கு அரும்பணி செய்ததார்கள்

Penulis : Anthony Leon raj on Monday, April 18, 2016 | 10:50 AM

 (லியோ)

மிஷனரிமார்  சமயத்தை பரப்புவதில் மட்டுமல்ல கல்வி ,சுகாதாரம்  என்னும் பணிகளில் கவனம் செலுத்தி கல்விச்சாலைகளையும் , வைத்தியசாலைகளையும்  நிருவித்து மக்களுக்கு அரும்பணி செய்ததாக  . இலங்கை கிராமிய சுவிசேசப் பணியாளர் மகாநாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தெரிவித்தார்  


இலங்கை கிராமிய சுவிசேசப் பணியினரால் மட்டக்களப்பில் நடாத்தப்படும் மிசனெறி மகா நாடு இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது .

உலகின் பல பாகங்களிருந்து இலங்கைக்கு வருகை தந்த மிசனெறிகள் இலங்கையில்  மதத்தை மட்டும் போதிக்காது, மனித நாகரிகம் ,கல்வி கூடங்கள்  ,மனித விழுமியம் , தொழில்நுட்பம் , வைத்தியசாலைகள் போன்ற பல்வேறுபட்ட மனித மேம்பாட்டு விடயங்களை உருவாக்கிய மிசனெறிகளை நினைவு கூறும் வகையில் இலங்கை கிராமிய சுவிசேஷ பணியினரால் நடாத்தப்படும் மூன்று நாள்  மகாநாடு 18ஆம் திகதி தொடக்கம்  21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது . இந்த  மகாநாட்டின்   முதல் நாள் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் பிற்பகல் இடம்பெற்றது .

இந்நிகழ்வின் பிரதம விருந்தினரான மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை உட்பட  அருட்தந்தையர்கள் , குருவானவர்கள் , சமய தலைவர்கள் , விரிவுரையாளர்கள் ,சமய பிரதிநிதிகள், பொதுநிலையினர் என பலர்  கலந்துகொண்டார் . 

இந்நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தெரிவிக்கையில் உலகின் பல பாகங்களிலுமிருந்து நம் நாட்டிற்கு  வந்த மிஷனரிகள் கிறிஸ்தவ மதத்தை அறிமுகம் செய்தார்கள் .

இதனால் இயற்கையின் சுவாத்திய மாறுபாடுகளும் ,உள்நாட்டவர்களின் எதிர்ப்புகளால் ஏற்பட்ட சவால்களையும் எதிர்நோக்கினார்கள் . மிஷனரிமாரின் வருகையின்  போது நம்நாட்டவர் கல்வியறிவற்ற அறிவீனத்திலும் ,வறுமையிலும் வாழ்வை  மேற்கொண்டார்கள் .

மிஷனரிமார்  ஆரம்பத்தில் சமயத்தை பரப்புவதில் மட்டுமல்ல விசேடமாக கல்வி ,சுகாதாரம்  என்னும் பணிகளில் கவனம் செலுத்தினார்கள் . 

கல்விச்சாலைகளையும் , வைத்தியசாலைகளையும்  நிருவித்து மக்களுக்கு அரும்பணி செய்தனர் .

அதன்படி  இயேசு சபையினரும் , மெதடிஸ்த  மிஷனரிமாரும்  கல்வி பணியை தொடர மரியாயின் பிரான்ஸ்கன் வைத்திய பணியை ஆரம்பித்து நோயாளிகளுக்கு சாதி மத பேதமின்றி  அனைவருக்கும் பணி செய்தனர் . 

கரையோர பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி பணிகள் பல கஷ்டங்கள் ,எதிர்ப்புகள் மத்தியிலும்  மெதுவாக நாட்டின் பல பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டதன் நன்மைகளை இன்று காணக்கூடியதாக உள்ளது .

15ஆம்  நூற்றாண்டில் வருகை தந்த போர்த்துகேய மிஷனரிகளே இலங்கையில் கிறிஸ்தவத்திற்கு வித்திட்டவர்கள் . அதைதொடர்ந்து 1543ஆம்  ஆண்டில் இருந்து பிரான்சிஸ்கன் மிஷனரி  இயேசு சபையினால்  மரியாயின் சேனை ,தூய குடும்ப சகோதரிகள் ,நல்லாயன் கன்னி மடத்தார் , மெதடிஸ்த மிஷன் ,அமெரிக்கன் சிலோன் மிஷன் ,  இரட்சண்ய சேனை  மிஷனரி இயக்கங்கள் சேவையாற்றினார் .

புனித ஜோசெப்வாஸ்  அடிகளார்கள் மிஷனரி தாக்கத்தால் தன்னை ஒரு கூலி தொழிலாளியாக வேஷம் மாறி 1687ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்தார் . 

அவர் சொரிக்கல்முனைகும் , தாண்டவன்வெளிக்கும் வந்து சமயத்தை போதித்ததாக  பூர்வீக கதைகள் உண்டு .

இப்போது நம் மத்தியில்  இயேசுசபை குருக்களான அருட் தந்தை டீர் மிலர் , அருட் தந்தை டுயு லோரிஸ் இருக்கின்றார்கள் .

மிஷனரிமாரின் வைராக்கியத்தால் அவர்கள் அடைந்த பாடுகளையும் கஷ்டங்களையும் இன்று அநேக  கத்தோலிக்கர்களும் .கிறிஸ்தவர்களும் அறியாமலிருக்கும் இக்கால கட்டத்தில் இலங்கை கிராமிய சுவிஷேச சேவை இவ்வாறானதோர்  மகாநாட்டை மட்டக்களப்பில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஒழுங்கு செய்ததை குறித்து நான் மகிழ்ச்சியடைவதோடு  இம்மகாநாடு தொடர்ந்து நம் மிஷனரி பணியை எதிர்காலத்தில் கொண்டு செல்ல  உந்துதலாக இருக்குமென்று தெரிவித்துக்கொண்டார் .


Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger