“உயிர்காப்போம்” ஓந்தாச்சிமடத்தில் இரத்ததானமுகாம்

நாட்டில் அதிகரித்துச்செல்லும் விபத்து சம்பவங்களினால் வைத்தியசாலைகளில் இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் இவற்றினை நிவர்த்திசெய்யும் வகையில் பொது அமைப்புகள் இரத்ததான முகாம்களை நடாத்திவருகின்றது.
இதன்கீழ் கல்முனை  ஆதார வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாகுறையினை நிர்வத்திசெய்யும் வகையிலான இரத்ததான முகாம் ஒன்று மட்டக்களப்பு,ஓந்தாச்சிமடத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

விபத்துகளில் பாதிக்கப்படும் உயிர்களை காப்பாற்றுவோம் என்னும் தொனிப்பொருளில் இரத்தானமுகாம் நடாத்தப்பட்டது.

ஓந்தாச்சிமடம் வடபத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் ஓந்தாச்சிமடத்தில் உள்ள மின்னல் விளையாட்டுக்கழகம்,புதிவிதி செய்வோம் இளைஞர் கழகம், சிவசக்தி இளைஞர் மன்றம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த இரத்தானமுகாம் நடாத்தப்பட்டது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி டாக்டர் என்.ரமேஸ் தலைமையிலான குழுவினர் இந் இரத்ததான முகாமை நடாத்தினர்.

உயிர்காக்கும் இந்த பணியில் பிரதேசத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இரத்தம் வழங்கியிருந்தனர்.