அருட்சகோதரர் சந்திரகுமார் அன்டன் பிரதாப்ராஜ் குருவானவராக திரு நிலைப்படுத்தபட்டார்

(லியோ)

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின்  புதிய குருவானவராக அருட்சகோதரர் சந்திரகுமார் அன்டன் பிரதாப்ராஜ்  இன்று திரு நிலைப்படுத்தபட்டார் . 


மட்டக்களப்பு   கல்லடியை பிறப்பிடமாக கொண்ட    அருட்சகோதரர் சந்திரகுமார் அன்டன் பிரதாப்ராஜ்   தமது  குருத்துவ  பணி வாழ்வினை தேர்ந்தெடுத்து   2016.04. 02ஆம் திகதி சனிக்கிழமை  இன்று மட்டக்களப்பு  புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில்  மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகையினால்   குருவாக திரு நிலைப்படுத்தபட்டார் . 

 அருட்சகோதரர்   சந்திரகுமார் அன்டன் பிரதாப்ராஜ் கல்லடி  புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய  பங்கை சேர்ந்த சந்திரகுமார் லில்லி ஜசிந்தா    தம்பதிகளின்  மூன்றாவது புதல்வன்   ஆவார் .
தமது ஆரம்பம் பாடசாலைக் கல்வியை மகாஜன கல்லூரியிலும் தொடர்ந்து  இந்து கல்லூரியிலும்  உயர்தரம் வரை  கல்வியை பெற்றுக்  கொண்டார் .  

ஆன்மீகம் உருவாக்கல்  பற்றிய  பயிற்சி  நெறிகளை  மட்டக்களப்பு மான்ரேசா ,நீர்கொழும்பு , களனி ,மதுரை ஆகிய குருமடத்திலும்   தொடர்ந்து  காலி உள்ள இயேசு சபையில்   இடை நிலை குருமடத்திலும் நிறைவு  செய்தார்.  

தொடர்ந்து  பிலிப்பின்சில் உள்ள  மணிலா மாநகரில் 2015 புரட்டாதி திங்கள் ஐந்தாம் திகதி  திருத்தொண்டராக  திருநிலைப்படுத்தப்பட்டார் .

 அருட்சகோதரர்   சந்திரகுமார் அன்டன் பிரதாப்ராஜ்  குருவாக குருத்துவ  திருநிலைப்படுத்தல்   விசேட திருப்பலி  சனிக்கிழமை  இன்று மட்டக்களப்பு  புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில்  மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகையினால்  ஒப்புகொடுக்கப்பட்டது . 

இந்த விசேட திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அருட்தந்தையர்கள்  , அருட்சகோதரிகள் மற்றும் அருட்சகோதரர்   சந்திரகுமார் அன்டன் பிரதாப்ராஜ்   குடும்பத்தினர்   பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர் .


திருப்பலியின் பின்  அருட்தந்தை சந்திரகுமார் அன்டன் பிரதாப்ராஜ்  அடிகளாரை வரவேற்கும் விசேட நிகழ்வுகள் மேயர் மண்டபத்தில் இடம்பெற்றது .