மாமாங்கம் - அமிர்தகழி பொது மயானத்திற்கான சுற்று மதில்கள் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

(லியோ)

மட்டக்களப்பு  மாமாங்கம் - அமிர்தகழி   கிராமத்தின்  மத்தியில் அமைந்துள்ள பொது மயானத்திற்கான சுற்று மதில்கள் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது


மட்டக்களப்பு   மாநகர  சபை நிருவாக  எல்லைக்குட்பட்ட   மட்டக்களப்பு   மாமாங்கம்  அமிர்தகழி   கிராமத்தின்   மத்தியில்  அமைந்துள்ள   மயானத்திற்கு   அருகாமையில்   வசிக்கும்  மக்கள்   நாள்  தோறும்  முகம்  கொடுகின்ற   சமூக , சுகாதார      சீர்கேடுகள்   தொடர்பாக  கோரிக்கைகள்  அடங்கிய  மகஜர்     கௌரவ   ஜனாதிபதியின்   கவனத்திற்கு  கொண்டுவரப்பட்டதை  அடுத்து ,

இது  தொடர்பாக   கலந்துரையாடலை  மேற்கொள்வதற்கு   சம்பந்தப்பட்ட       தரப்பினர்களுக்கும்   மற்றும்   மாமாங்கம் , அமிர்தகழி , புன்னச்சோலை ஆகிய  கிராம   பிரிவுகளின்   கிராம  சேவை  உத்தியோகத்தர்கள் ,  பொருளாதார                                             
அபிவிருத்தி   உத்தியோகத்தர்கள் ,கிராம  அபிவிருத்தி  சங்க  உறுப்பினர்கள் ,  ஆலய  நிருவாக  சபை  உறுப்பினர்கள் , கிராம  பொது நல  அமைப்புகளின்  உறுப்பினர்கள்  ,  முன்னால்  மாநகர  சபை  உறுப்பினர்   ஆகியோருக்கும் மட்டக்களப்பு  மாநகர   ஆணையாளரினால்  அழைப்பு  விடுக்கப்பட்டு       ஆணையாளர்  எம் .உதயகுமார்  தலைமையில்       கலந்துரையாடல் கடந்த 29.10.2015 ஆம் திகதி மட்டக்களப்பு  மாநகர  சபை  அலுவலகத்தில்   இடம்பெற்றது .

மட்டக்களப்பு  மாநகர  சபை  அலுவலகத்தில்   இடம்பெற்ற  கலந்துரையாடலின்   போது   சம்பந்தப்பட்ட  தரப்பினர்   தாங்கள் எதிர்  நோக்குகின்ற  பிரச்சினைகள்  தொடர்பாக   ஆணையாளரின்                        
கவனத்திற்கு  கொண்டு  கொண்டுவந்தனர் .
முன்வைக்கப்பட்ட   கோரிக்கைகள்   தொடர்பாக  கலந்துரையாடலில்  கலந்துகொண்டவர்களினால்   ஆராயப்பட்டு   இதற்கான  நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு  தீர்மானம்  எடுக்கப்பட்டது .


எடுக்கப்பட்ட  தீர்மானத்திற்கு அமைவாக   மயானத்திற்கான   சுற்று  மதில்கள்  அமைக்கப்பட்டு   மயானத்திற்கான   காவலாளிகள்  இருவரை  நியமிப்பதோடு  சடலம்  எரிப்பதற்கான  மாற்று  நடவடிக்கை    மேற்கொள்வதாக     தெரிவிக்கப்பட்டது .

இதற்கான  நிதியினை  மாநகர   சபையின் பன்முகப்படுத்தப்பட்ட  நிதி  ஒதுக்கீட்டுடன்  மாநகர   சபையின் மேற்பார்வையில்  கீழ் அமிர்தகழி  கிராம  அபிவிருத்தி  சங்கம்   ,  ஆலய   நிருவாக  சபைகள் ,       பாராளுமன்ற   உறுப்பினர்கள்    மற்றும்  பொது  மக்களின்   ஒத்துழைப்புடன்   நிதி  ஒதுக்கீடு   செய்யப்பட்டு     மயானத்திற்கான    சுற்று  மதில்கள்   அமைப்பதற்கான  நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்படும்      என    தீர்மானிக்கப்பட்டது .

கடந்த 29.10.2015ஆம் திகதி இடம்பெற்ற  கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட  தீர்மானத்திற்கு அமைவாக    மாநகர  சபையின்  பன்முகப்படுத்தப்பட்ட  நிதி  ஒதுக்கீட்டுடன்  அமிர்தகழி  கிராம  அபிவிருத்தி  சங்கம்   ,   ஆலய  நிருவாக சபைகள் ,  மற்றும்  மாமாங்கம் -      அமிர்தகழி  கிராம   மக்களின் முழு   பங்களிப்புடன்     மட்டக்களப்பு மாநகர   சபையின் மேற்பார்வையில் கீழ் மாமாங்கம் - அமிர்தகழி   கிராமத்தின்  மத்தியில் அமைந்துள்ள பொது மயானத்திற்கான   சுற்று மதில்கள்  நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .