மண்டூரில் புனரமைக்கப்பட்ட மாதிரிப்பண்ணை எதிர்க்கட்சி தலைவரினால் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டூர் 14ஆம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட மாதிரி ஒருங்கிணைந்த விவசாய பண்ணை, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனால், இன்று சனிக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பண்ணையைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞாஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மற்றும் உட்பட கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கால் நடை வைத்திய அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் அதிகாரிகள் என பலரும் கொண்டனர்.

மட்டக்களப்பு மண்டூர், ஒல்லிமடு வீதியில் புனரமைக்கப்பட்டுள்ள இந்த பண்ணையில், நவீன கோழிப்பண்ணை மற்றும் மாட்டுப்பண்ணை ஆட்டுப்பண்ணை என்பனவும் இதன் போது திறந்து வைக்கப்பட்டன.

இந்த வைபவத்தில், உள்ளீடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பவைகளும் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.