மாகானங்களுக்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டி


(லியோ)

 கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மாகானங்களுக்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டி 19ம் திகதி   முதல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது .


இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மாகானங்களுக்கு இடையில் நடாத்தும் 19 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக வட கிழக்கு மாகாண அணிகள் உள்வாங்கப்பட்டு எதிர்வரும் 19ம் திகதி போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

கிழக்கு மாகாண அணிக்கு மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழக வீரரும், இந்துக்கல்லூரி மாணவருமான செல்வன்.தேனுஜன் தலைமை பொறுப்பை ஏற்று அணியை வழி நடாத்தவுள்ளார்.

இவ்வணியில் மட்டக்களப்பில் இருந்து 3வீரர்களும், அம்பாரையில் இருந்து 3வீரர்களும், கல்முனை, திரிகோணமலை, கந்தலாய், சேருவில, மற்றும் கின்னியா ஆகிய இடங்களில் இருந்து ஒவ்வொரு வீரர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களுக்கு போட்டிகளில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதற்காக கொழுப்பு மாகாண அனுபவ வீரர்கள் மூவர் இவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.


கிழக்கு மாகாண அணிக்கு பயிற்றுவிப்பாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் நிரோசன் பண்டாரதிலக்க நியமிக்கப்பட்டதுடன் உதவி பிற்சியாளராக திரு.ஜவ்வனன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வணியை ஒழுங்கமைக்கும் ஏற்பாட்டளராக மட்டக்களப்பு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் திரு.பிரதீபன் அவர்கள் செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்த விடயமாகும்.

மட்டு நகரில் இருந்து கோட்டைமுனை விளையாட்டு கழக வீரரும், இந்துக்கல்லூரி மாணவருமான செல்வன்.சாருகன் இணைத்துக் கொள்ளப்படடதுடன்; புனித மிக்கல் கல்லூரி மாணவன் செல்வன்.பிரசன்னாவும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.


இம்மாதம் 19ம் திகதி ஆரம்பமாகும் இப்போட்டிகள் மே 12ம் திகதி இறுதிப்போட்டியுடன் நிறைவடையும் இப்போட்டிகளில் சிறப்பாக செயற்படும் வீரர்கள் இவ்வருடம் யூலை மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான தொடரில் தேசிய அணியில் கலந்து கொள்ள இருப்பதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் புதிய மாற்றமாய் வடக்கு கிழக்கு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது வீரர்கள் தேசிய அணியில் இடம்பெற நாமும் வாழ்த்துவோம்.

போட்டி விபரம்
19.04.2016 – மத்திய மாகணம் எதிர் கிழக்கு மாகாணம்
24.04.2016 – தென்மேற்கு மாகாணம் எதிர் கிழக்கு மாகாணம்
28.04.2016 – தெற்கு மாகாணம் எதிர் கிழக்கு மாகாணம்
02.05.2016 – வடக்கு மாகாணம் எதிர் கிழக்கு மாகாணம்
10,11,12.05.2016 இறுதிப்போட்டிகள்

தகவல்
பாலசிங்கம் ஜெயதாசன்
செயலாளர்
கோட்டைமுனை விளையாட்டு கழகம்