காத்தான்குடி நகர பகுதிகளில் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்களை தடுப்பதற்கான கலந்துரையாடல்

 (லியோ)

 காத்தான்குடி நகர பகுதிகளில் வீதி விபத்துக்களை  தடுப்பதற்கான வேலைத்திட்டத்திற்கான விசேட  கலந்துரையாடல்  காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு  மண்டபத்தில் 19,04.2016 மாலை  நடைபெற்றது.

 மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகர  பகுதிகளில்  அண்மைக்காலமாக அதிக வீதி விபத்துக்கள் இடம்பெற்று பலர் அவயங்களை இளக்குமளவிற்கு ஆளாகியுள்ளதனை கருத்திற் கொண்டு  வீதி விபத்துக்களை  தடுப்பதற்கான காரணிகளைக் கண்டறிந்து உடனடியாக அவற்றினை தடுப்பதற்கான வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு விசேட  கலந்துரையாடல்  காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு  மண்டபத்தில் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்பிலி பாறூக் தலைமையில் 19,04.2016 மாலை  நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் யே.சர்வேஸ்வரன், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் அப்கர் , காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியர் ஜாபீர்  மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் உயரதிகாரிகள் , பொறியியலாளர்கள், காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டர் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

க்கூட்டத்தில் கலந்துகொண்டு விபத்துக்களை தடுப்பதற்கான பல்வேறுபட்ட கருத்தக்களை பரிமாறி தீர்க்கமான முடிவிற்கு வந்ததனைத் தொடர்ந்து கள விஜயம் மேற்கொண்டு வீதி விபத்துக்கள் அதிகம் நிகழும் இடங்களையும் பார்வையிட்டனர்.

இதன்போது மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்பிலி பாறூக் கருத்து தெரிவிக்கையில் நல்லாட்சி அரசாங்கம் மக்களை பாதுகாப்பதற்கான திட்டங்களையும் செயற்படுத்துவதற்கு தவறக்கூடாது என தெரிவித்தார்.