மாவட்ட மட்ட C பிரிவு கழகங்களுக்கிடையிலான 5வது சுற்று வட்ட போட்டியின் 456 வது போட்டிக்கு கெக்கிராவ யுனைடட் கழக அணியினர் தெரிவு

(லியோ)

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம்  கா கில்ஸ் பூட்  சிட்டி  அனுசரணையுடன் மாவட்ட ரீதியில் உதைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையில் போட்டிகளை நடத்தி வருகின்றது .


இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில்  மாவட்ட மட்ட  C பிரிவு கழகங்களுக்கிடையிலான  5வது  சுற்று வட்ட போட்டியின்  455 வது போட்டி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா பாடசாலை மைதானத்தில் உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் எஸ் .உதயராஜ் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

 இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு கோல்ட் பிஷ் (gold fish ) உதைப்பந்தாட்ட கழக அணியுடன் கெக்கிராவ யுனைடட் உதைப்பந்தாட்ட கழக அணி மோதிகொண்டன .

நேற்று மாலை 04.00 மணிக்கு ஆரம்பமான  C பிரிவு கழகங்களுக்கிடையிலான  5வது  சுற்று வட்ட போட்டியின்  455 வது போட்டியில் இரு அணிகளும் 2 – 2  என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் நிறைவுற்றது .

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனை உதை போட்டியில்  3 – 5 என்ற தண்டனை உதை மூலம் கெக்கிராவ யுனைடட் உதைப்பந்தாட்ட கழக அணியினர்  வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.