புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபை ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான முகாம்

(லியோ)

 இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கம் , புளியந்தீவு வாலிப சங்கம்  மற்றும்  மிக்கேல் கல்லூரி 1998  ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான  முகாம் இன்று இடம்பெற்றது .

  மட்டக்களப்பு  இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கம் , புளியந்தீவு வாலிப சங்கம்  மற்றும்  மிக்கேல் கல்லூரி 1998  ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபை ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து  மாபெரும் இரத்ததான  முகாம் இன்று இடம்பெற்றது .

மட்டக்களப்பு இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கம் , புளியந்தீவு வாலிப சங்கம்  மற்றும்  மிக்கேல் கல்லூரி 1998  ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபை ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து  மாபெரும் இரத்ததான  முகாம் இன்று    காலை 09.00 மணியளவில்    மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில்  ஆரம்பமானது .

போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்கீழ் இன்று காலை 09.00 மணி முதல்  பிற்பகல்  02.00  மணி வரை  இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது .



இளைஞர் யுவதிகள்  சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில்  மட்டக்களப்பு இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கம் , புளியந்தீவு வாலிப சங்கம்  மற்றும்  மிக்கேல் கல்லூரி 1998  ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் ஆகியோரின்  ஏற்பாட்டில்  முன்னெடுக்கப்பட்ட மாபெரும்


இரத்ததான  முகாமில் 68   பேர் தமது உதிரத்தை தானமாக வழங்கி இருந்தார்கள்.


இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் .கே .விவேக் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ,மட்டக்களப்பு இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கம் உறுப்பினர்கள் , புளியந்தீவு வாலிப சங்கம்   அங்கத்தவர்கள் மற்றும் மிக்கேல் கல்லூரி 1998  ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.