குரு பூசை தினத்தை முன்னிட்டு விசேட பூசை நிகழ்வுகள்

(லியோ)

குரு பூசை தினத்தை முன்னிட்டு இன்று நாடாளாவிய ரீதியில் அறநெறி பாடசாலைகளில் விசேட பூசை நிகழ்வுகள் இடம்பெற்றன .


இந்நிகழ்வினை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக இந்து கலாசார அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு – நாவலடி – திராய்மடு ஸ்ரீ தேவி  ஆச்சிரம அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில்  அறநெறிப் பாடசாலை அதிபர்  திருமதி சுதர்சினி பிரபாகரன் தலைமையில் குரு பூசை நிகழ்வுகள் இன்று  மட்டக்களப்பு – நாவலடி நாமகள் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.


இன்று இடம்பெற்ற குரு பூசை நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி . பாலசுந்தரம் சரோஜனி  மட்டக்களப்பு அம்பாறை இந்து ஆய்வுகளின் ஒன்றிய ஆலோசகரும்  ஸ்ரீ தேவி ஆச்சிரம ஸ்தாபக உறுப்பினருமான வர்ணகுலசிங்கம் கமலதாஸ் , ஸ்ரீ தேவி ஆச்சிரம அறநெறி பாடசாலையின் மூத்த ஆலோசகரும் உறுப்பினருமான  திருமதி . மகேஸ்வரி சோமசுந்தரம் , காலந்தீஸ்வரா ஆலயத் தலைவரும் கிராம அபிவிருத்தி சங்க செயலாளருமான இராசையா இரத்தினகுமார் , 63 நாயன்மார் நற்பணி மன்ற ஆசிரியரும் , வீரகத்தி பிள்ளையார் ஆலய செயலாளருமான ஜோதீராஜா கருணாஸ் ,ஸ்ரீ தேவி ஆச்சிரம அறநெறி பாடசாலை ஆசிரியர்களான திருமதி .சுந்தரேஸ்வரி  முருகதாஸ் . திருமதி . தர்சினி ரவீந்திரன் , திருமதி . வனஜா கமலநாதன் , திருமதி . காரனியா பார்த்தீபன் , வரகுணம் பிரியந்தன் , மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர் .