சமூக அமைப்புக்களுக்கான உணவு பாதுகாப்பு திட்டம் தொடர்பான செயலமர்வு

(லியோ)

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட சமூக அமைப்புக்களுக்கான உணவு பாதுகாப்பு திட்டம் தொடர்பான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது


மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட்  நிறுவகம்  அனுசரணையில்  கரித்தாஸ் நோர்வே நிறுவன நிதி உதவியுடன்   சமூக அமைப்புக்களை மேம்படுத்தி நீடித்து நிலைத்திருக்கக் கூடிய விவசாயத்தை உறுதி செய்யும் நோக்குடன் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கான செயலமர்வு செடெக் உணவு பாதுகாப்பு திட்ட  தலைமை காரியாலயம்  ஒருங்கிணைப்பாளர் திருமதி . நிலானி திசேரா தலைமையில் இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது .

நீடித்து நிலைத்திருக்கக் கூடிய விவசாயத்தை உறுதி செய்யும் திட்டத்தில் நஞ்சு அற்ற விவசாய உணவு உற்பத்திகள் மற்றும் வரட்சி, வெள்ளம் போன்ற காலங்களில் பயிர் செய்கையினை மேற்கொள்வதற்கான உபாயங்கள் போன்ற பயிற்சிகள் இன்று இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது .

இடம்பெற்ற செயலமர்வில் வளவாளராக விவசாய இலாகா அலுவலக உத்தியோகத்தர்  டி . கருணாகரன் கலந்துகொண்டார் .


இந்நிகழ்வில் விவசாய அலுவலக விவசாய பிரிவு உத்தியோகத்தர்  டி .மாதவன் , மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்ததின்  உணவு பாதுகாப்பு திட்ட முகாமையாளர்  பி . கந்தசாமி மற்றும் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட பயனாளிகள் கலந்துகொண்டனர் .