புத்தாக்குனர் போட்டியில் தங்க பதக்கத்தை பெற்ற மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவன்

(லியோ)

தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான புத்தாக்குனர் போட்டியில்   மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவன் முதலிடத்தை  பெற்று மட்டக்களப்புக்கும்  . கிழக்கு  மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளான் .

 விஞ்ஞான  ஒலிம்பியாட்  .  ஐ .பி . லங்கா  நிறுவன  ஏற்பாட்டில் மாரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்ற  2016  ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான  புத்தாக்குனர்  போட்டியில்  பங்கு பற்றிய மட்டக்களப்பு இந்து கல்லூரி  மாணவன் தங்க பதக்கத்தை பெற்று கல்லூரிக்கும் , மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளான் .

விஞ்ஞான  ஒலிம்பியாட்    ஐ பி  லங்கா  நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 2016  ஆம் வருடத்திற்கான  புதிய கண்டு பிடிப்பாளர்கள் போட்டியில் தேசிய ரீதியில் பங்கு பற்றிய  150  பாடசாலை மாணவர்களில்   மட்டக்களப்பு இந்து கல்லூரியில் தொழில்நுட்ப கல்வியினை கற்று வரும்  மாணவன் செல்வன் ஜெயசீலன் நிருஸ்காந்தின் புதிய கண்டுபிடிப்பான  மோட்டார் சைக்களுக்கான  தலை கவசம் முதலிடத்தை பெற்றுள்ளது .

இந்த தலை கவசத்தில் இணைக்கப்பட்டுள்ள  கழுத்து  பட்டி  அணியாவிட்டால்  தலை கவசத்திலிருந்து ஒளி எழுப்பப்பட்டும் இதன் மூலம் தலை கவசத்தின்  கழுத்து  பட்டி அணியவில்லை என எச்சரிக்கை விடுக்கப்படும்

 இதனை கண்டு பிடித்த மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் புத்தாக்குனர் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளான் .

தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்ற மாணவனுக்கு விஞ்ஞான  ஒலிம்பியாட்    ஐ பி  லங்கா  நிறுவனத்தினால் தங்கப்பதக்கமும் ,பணப்பரிசும் ,சான்றிதழும் வழங்கப்பட்டது .

இதன் மூலம்  இந்து கல்லூரி மாணவன் செல்வன் ஜெயசீலன் நிருஸ்காந் மட்டக்களப்புக்கும்  . கிழக்கு  மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது  .