நாவக்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியால மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

(லியோ)

மட்டக்களப்பு  நாவக்கேணி  ஸ்ரீ  கண்ணகி வித்தியால மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இன்று இடம்பெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  நாவக்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியால மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் , வீதி நாடகமும்  வித்தியாலய அதிபர் வே . சிறிபால ராஜ் தலைமையில்  வித்தியாலய பிரதி அதிபர் வே . செல்வராஜ் ஒழுங்கமைப்பில் இன்று நாவக்கேணி கிராம பகுதியில்  இடம்பெற்றது .

இன்று இடம்பெற்ற  டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வின் போது  உயிர் கொள்ளி டெங்குவை ஒழிப்போம் ,  எம்மை  டெங்கு  நோயில் இருந்து பாதுகாப்போம் , எமது சூழலை  டெங்கு அற்ற  இடமாக மாற்றுவோம்  என்ற வாசகங்களை ஏந்திய வாறு  ஊர்வலத்தில் கலந்துகொண்டதுடன் , மாணவர்களின்  வீதி நாடகங்களும் இடம்பெற்றது .

 இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக் ஆரம்பக்கல்வி  கல்விப் பணிப்பாளர் ஆர் .பாஸ்கரன்  மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில்  பிரதம  விருந்தினராக கலந்துகொண்ட உதவி கல்விப்பணிப்பாளர் உரையாற்றுகையில் இந்த பாடசாலை மாணவர்கள்  இன்று மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வானது இன்றைய காலகட்டத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்.

இந்த டெங்கு நோயினால் கடந்த இரண்டு தசாப்தங்களாக எமது பிரதேசத்தல் அதிகமான மாணவர்களும் ,பொதுமக்களும் மரணமடைந்துள்ளனர் .

அந்த வகையில் டெங்கு நோய் ஒழிப்பு சம்பந்தமாக  பாடசாலை மாணவர்களினால் இந்த பிரதேசத்தில்  மேற்கொண்ட விழிப்புணர்வு செயலானது இப்பிரதேச மக்களுக்கு  மிக அவசியமான ஒன்றாகும்.

 எனவே இப்பிரதேசத்தில் வாழ்கின்ற அனைவரும் டெங்கு குடம்பிகள் பரவுகின்ற சூழலில் இருந்து விடுபட்டு நல்லதொரு சுகாதாரமான சூழலையும் ,மாணவர்களையும் உருவாக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார் .