மட்டு - போதனா வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு தரிப்பிடங்கள் வழங்கப்படுவதில்லை சாரதிகள் கண்டனம்

(லியோ)

அம்புலன்ஸ் வண்டிகளை நிறுத்துவதற்கான தரிப்பிடங்கள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து    அம்புலன்ஸ் சாரதிகள்  பிரதான வீதியில் எம்புலன்ஸ் வண்டிகளை நிருத்தியவாறு  தமது கண்டனத்தை தெரிவித்தனர் .
மட்டக்களப்பு மாவட்டத்தின்  பிரதேச மட்ட வைத்தியசாலைகளில் இருந்து  மேலதிக சிகிச்சைகளுக்காக  நோயாளிகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வேளையில்  தமது அம்புலன்ஸ் வண்டிகளை தரித்து நிற்பதற்கான தரிப்பிடங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் வழங்கப்படுவதில்லை  என தெரிவித்து அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் இன்று தமது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் அம்புலன்ஸ் வண்டிகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள பிரதான வீதியில் நிருத்தியவாறு தமது கண்டனத்தை தெரிவித்துக்கொண்டனர்  .

இது தொடர்பாக சாரதிகள் தெரிவிக்கையில் வெளி பிரதேசங்களில் இருந்து நோயாளிகளை ஏற்றிவரும் அம்புலன்ஸ்  வண்டிகள் நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் எம்புலன்ஸ் வண்டிகளை நிறுத்துவதற்கான தரிப்பிடங்கள் வைத்தியசாலை வளாகத்தில் வழங்கப்படுவதில்லை .

இதன் காரணமாக வண்டிகளை பிரதான வீதியில்  நிறுத்துவதால்  தாம் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கும் சாரதிகள் இது தொடர்பான வைத்தியசாலை அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் இதற்கான உரிய பதில்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர் .

அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் முன்வைத்த குற்றசாட்டுக்கள் தொடர்பாக வைத்தியசாலை அதிகாரியிடம் கேட்டபோது  தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாக பகுதியில் புதிய கட்டிட நிர்மான பணிகள் இடம்பெறுவதால் இடபற்றாக்குறை நிலவுகின்றது .இதனால் வெளியிட பிரதேசங்களில் இருந்து வரும் அம்புலன்ஸ் வண்டிகளை நிறுத்துவதற்கு தரிப்பிடங்கள் வழங்கப்படுவதில்லை .

எனவே வெளியிட பிரதேசங்களில் இருந்து வரும் அம்புலன்ஸ் வண்டி சாரதிகளுக்கு தரிப்பிடங்கள் வழங்குவதற்கு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக  தெரிவித்தார் .