கலைஞர்களை கலாசார அதிகார சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யும் நிகழ்வு

(லியோ)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்களை  கலாசார அதிகார சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து செயற்படுத்தும் கலாசார அதிகார சபை அமைத்தல் தொடர்பாக உறுப்பினர்களை தெரிவு செய்யும்  ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் இடம்பெற்றது . 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா , மண்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ் . தில்லைநாதன் , அருட்தந்தை  எக்ஸ் .ஐ . ரஜீவன் , சிவஸ்ரீ பால சதீஸ்வர குருக்கள் மற்றும்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில்  உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் கிராமப் புறங்களில் உருவாகின்ற கலாசார மற்றும் கலை ஆக்கங்கள் வெளிவராமல் மலர்ந்த  இடத்திலேயே இருக்கின்றது .

நகரத்தில் உருவாகின்ற  கலை படைப்புக்கள் மாத்திரமே தேசத்தின் கலாச்சாரமாக உருவாக்கி தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் பிரபல்யம் அடைகின்றது .

எனவே இதனை கருத்தில் கொண்டு கலாசார அதிகார சபை இலங்கை கலைஞர்களின் கலை படைப்புக்களை  தனிச்சிறப்பு மற்றும் பெருமதிகளைக் கொண்ட கலை மற்றும் கலாச்சாரமாக  தேசத்தின் கலாச்சாரத்தை மீளமைக்கும் திட்டத்தின் கீழ் இதனை நடைமுறை படுத்துவதாக தெரிவித்தார் .