“நிலையான அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு

(லியோ)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரையம்பதி மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் இளம் வயது பெண்களின் திருமணம் தொடர்பான கருத்தரங்கு இன்று இடம்பெற்றது .


“நிலையான அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரையம்பதி மண்முனை பற்று பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர்  விவகார திணைக்கள உத்தியோகத்தர்  திருமதி  சந்திர ஜோதி ஜெயதீஸ்வரன் ஒழுங்கமைப்பில்  மண்முனை பற்று பிரதேச செயலக  உதவி திட்டமிடல் பணிப்பாளர்  இ . லதாகரன் தலைமையில்  மண்முனைப்பற்று பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட பெண்களின் இளம் வயது திருமணம்  தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு   இன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில்  வளவாளராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் அல்மேதா கலந்துகொண்டார் .


இன்று இடம்பெற்ற “நிலையான அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம்” எனும் தொனிப்பொருளில்  பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் ஆரையம்பதி மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .