“அம்மாவுடன் சித்திரம் பார்ப்போம்” முன்பள்ளி சிறார்களின் ஓவியம் கண்காட்சி

 (லியோ)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி சிறார்களின்  “அம்மாவுடன் சித்திரம் பார்ப்போம்” ஓவியம் கண்காட்சி இன்று இடம்பெற்றது 


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் ,கலாசார மற்றும் கலை அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் “பன்னிரெண்டு மாத விளக்கு” எனும் தொனிப்பொருளில்  “சுதந்திரத்தின் எல்லை வானம்” எனும் தலைப்பில் 38  முன்பள்ளிகளுக்கு ஓவியம் வரைதல் ஊக்குவிப்பு  திட்டம் செயல்படுத்தப்பட்டு  அந்த திட்டத்தின் ஊடாக  முன்பள்ளி மாணவர்களினால் வரையப்பட்ட ஓவியங்களை   “அம்மாவுடன் சித்திரம் பார்ப்போம்” என்ற தலைப்புடன் ஓவியம் கண்காட்சி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி . தவராஜா தலைமையில் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது . 


 இன்று இடம்பெற்ற   “அம்மாவுடன் சித்திரம் பார்ப்போம்” முன்பள்ளி சிறுவர்களினது  ஓவியம் கண்காட்சி நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான  திருமதி . சாலினி மதன்குமார் , ஜனாப் எ .எல் . முசாத்திக்  , மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்  திருமதி . தர்பனா ஜெயமாரன்  மற்றும் முன்பள்ளி சிறார்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .

இக்கண்காட்சியின ஆரம்பித்து வைத்த பிரதேச செயலாளர் இங்கு உரையாற்றுகையில் ஒரு மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்கும்  நோக்கில் சிறுவர்களிடம் இருக்கின்ற திறன்களை வெளிப்படுகின்ற வகையில் ஓவியம் வரைதல் என்ற  திட்டத்தினை முன்பள்ளி மாணவர்களிடம் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

 இந்த திட்டத்தினை  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இருக்கின்ற 38 முன்பள்ளி  மாணவர்களுக்கு  ஓவியம் வரைதல் சந்தர்ப்பத்தை வழங்கி அந்த மாணவர்களின் ஓவியங்களை காட்சிப்படுத்தும் வகையில் “அம்மாவுடம் ஓவியம் பார்ப்போம் “ என்ற தலைப்புடன் இன்று இங்கு காட்சிப்படுத்தபட்டுள்ளது .

தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர் தமது குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் சென்று ஒரு இடத்தை பார்ப்பதற்கோ  , ரசிப்பதற்கோ சந்தர்ப்பங்கள் மிக குறைவாக காணப்படுகின்றது .

பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை தங்களுக்காக தயார் படுத்தி கொள்கின்ற வகையில்  இருகின்றார்கள் தவிர பிள்ளைகளுக்காக தங்களை மாற்றிக்கொள்கின்ற தாய் தந்தையர்கள் மிக குறைவாகவே காணப்படுகின்றனர் .

குழந்தைகளுக்கு என்று ஒரு ஆற்றல் ,சிந்தனை இருக்கின்றது அதனை விட்டு வைத்தால் அந்த குழந்தையின் மன வெளிப்பாடுகளையும் ஆற்றல்களையும் அறிந்துகொள்ள முடியும் .

எனவே உங்கள் குழந்தைகள் எதை விரும்புகின்றதோ அதை ஏற்படுத்தி கொடுத்து அந்த சந்தர்ப்பத்தை அவர்களுக்கு  வழங்க ஒவ்வொரு பெற்றோரும் முயற்சிக்க வேண்டும் .

அந்தவகையில் இந்த ஓவியம் வரைதல் திட்டத்தினை முன்பள்ளி மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்களின் திறமைகளை வெளிபடுத்தும் வகையில் இந்த ஓவியம் வரைதல் திட்டத்தினை மண்முனை வடக்கு பிரதேச  செயலகமும்  கலாசார மற்றும் கலை அலுவல்கள் திணைக்களமும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.