தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களை எதிர்க்கவில்லை –முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்

(இ.சுதாகரன்)

தமிழ் அரசியல் வாதிகள் எப்போதும் சகோதர இனமாகிய முஸ்லிங்களை எதிர்க்க வில்லை. வடகிழக்கில் தமிழ் மொழி பேசுகின்ற இரு இனங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில்த்தான் எமது தீர்வுத்திட்டம் அமையும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பாக மக்களை தெளிவு படுத்தும் நோக்கில் துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று திங்கட்கிழமை மாலை இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்; தொகுதி கிளை உறுப்பினர் த.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு சமகால அரசியல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் மாற்றத்திற்கு அமைவாக ஜனநாயக ரீதியாக முழுமையாக நடைபெற்ற தேர்தலில் கொலை வெறி கொண்ட முன்னாள் ஜனாதிபதி மக்களால் தோக்கடிக்கப்பட்டு புதிய நடை முறைக்கு அமைவாக ஜனநாயக கோட்பாடுகளை பின்பற்றக் கூடிய நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் எனக் கூறக் கூடிய அரசாங்கத்தில் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கக் கூடிய மைத்திரி பால சிறிசேன அவர்களின் முன்னெடுப்புக்கள் வரவேற்கத்தக்கது .

ஒரு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று அதன் மூலம்  தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அவர்கள் முன்னர் ஆட்சி செய்த ஏனைய நிறைவேற்று ஜனாதிபதிகளுடன்  ஒப்பிடுகின்ற போது மைத்திரி பால சிறிசேன அவர்களின் ஊடக அறிக்கைகள் மற்றும் உள்ளாந்த செயற்பாடுகள் மூலமாக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுகின்ற தீர்வுத் திட்டம் தொடர்பான உண்மையான நிலைப்பாடு இருக்கின்ற போதிலும் இனவாத மாயைக்குள் பலர் தடுக்கின்ற சந்தர்பத்தில் அவரும் ஏற்றுக் கொள்கின்றமையினை உணரமுடியும்.

பாராளுமன்ற நடைமுறையில் தேர்தலில் அதிக ஆசனங்களை பெறுகின்ற கட்சி ஆளும் கட்சியாகவும் இரண்டாம் நிலையில் இருக்கக் கூடிய கட்சி எதிர் கட்சியாகவும் வரமுடியும் இது பாராளுமன்ற நடைமுறையாகும்.

ஆரம்ப காலங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி இஐக்கிய தேசியக்கட்சி இதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இஜனநாயக ஐக்கிய முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் மாத்திரமே ஆரம்ப காலத்தில் காணப்பட்டனஆனால் அதன்பிற்பாடு பலகட்சிகள் தோற்றம் பெற்றன.

அண்மையில் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக பிழையான கருத்தினை ஊடகம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளமையினை ஏற்றுக் கொள்ள முடியாது.தமிழ் அரசியல் வாதிகள் எப்போதும் சகோதர இனமாகிய முஸ்லிங்களை எதிர்க்க வில்லை வடகிழக்கில் தமிழ் மொழி பேசுகின்ற இரு இனங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில்த்தான் எமது தீர்வுத்திட்டம் அமையும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமிi;லை.

இன்று தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது அதனை ஏற்றுக் கொள்கின்றேன் .ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே தமிழ் மக்கள் பேரவையினை உருவாக்கியுள்ளனர்.

ஒருவர் மூன்று அமைப்புக்களுள் உள்வாங்கப்பட்டு தீர்வுத் திட்டத்தினை முன்வைப்பதனை அரசு ஏற்றுக் கொள்ளாது.எமது தலைவர் இரா சம்பந்தன் ஐயா மிகவும் மெதுமையாக தனது அரசியல் நகர்வினை மேற்கொண்டு வருகின்றார். அவரின் வழியில் சென்று அரசியல் தீர்வினை பெறமுயுயும்.என்பதில் எதுவிதமான சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்தார்.