தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தெரு வெளி நாடக ஆரம்ப நிகழ்வு

(லியோ)

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  கிளையினால் நடத்தப்பட்ட தெரு வெளி நாடக  ஆரம்ப நிகழ்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது .


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் நடத்தப்படும்  தொழில் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் தெரு வெளி நாடக  ஆற்றுகையின் ஆரம்ப நிகழ்வு    மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி . அ. நிசாந்தி தலைமையில் இன்றைய தினம்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது . 

தற்போதைய இளைஞர் யுவதிகள் தமது கல்வியினை முடித்ததன் பின் அரச தொழிலை மட்டும் எதிர்பாராது கைத்தொழிலை கற்று சுயமாக கௌரவத்தோடு வாழமுடியும் என்பதனை வலியுறுத்தி  இளைஞர் யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்    நாடகச் செயற்பாட்டாளர்களான து .கௌரீஸ்வரன்  மற்றும் ப . ராஜதிலீபன் ஆகிய இருவரின் நெறிப்படுத்தலில்  இந்த தெரு வெளி நாடகம் இன்று இடம்பெற்றது
.
இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா .மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி . அ. நிசாந்தி , மண்முனை  வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் பி . பிரசாந்தி , தேசிய இளைஞர் சேவை பாராளுமன்ற உறுப்பினர் பயஸ் ராஜ்  மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனை வடக்கு  இளைஞர் சேவை மன்ற இளைஞர் , யுவதிகள் கலந்துகொண்டனர் .