சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை நீடிப்பு

(லியோ)

 சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை எதிர் வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் பிணை மனு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மனு  தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் .

இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட  சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு  மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது  எதிர் வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை பிணை மனு மீதான விசாரணையை ஒத்தி வைப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி . சந்திராணி விஸ்வலிங்கம் உத்தரவிட்டார் ,  


இதன் காரணமாக சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.