அற்புதங்கள் நிறைந்ததாக நடைபெற்ற தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய கும்பாபிசேகம் -பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கிழக்கிலங்கையின் மிகவும் பழமையானவும் வரலாற்றுசிறப்புமிக்கதுமான மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன பஞ்சகுண்ட யாக மஹா கும்பாபிசேகம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையினை ஆட்சிய செய்த தமிழ் மன்னர்களினால் பராமரிக்கப்பட்ட ஆலயம் எனப்பெருமைகொண்ட இந்த ஆலயத்தில் இலங்கையின் வரலாற்றில் இராஜகோபுரத்திற்கு பதிலாக கலை அம்சம்கொண்ட 64 அடி உயிரமான வலம்புரி விநாயகர் சிலை இராஜகோபுரமாக அமைக்கப்பட்ட பெருமையினை இந்த ஆலயம்பெற்றுள்ளது.

இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் ஆகம வித்தகர் சிவஸ்ரீ சீதாராம சிவாச்சாரியார் தலைமையில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது.
இலங்கையின் ஆலய சிற்பக்கலைகளின் வளர்ச்சியின் ஒரு படிக்கல்லாக அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் நாகதம்பிரன், சிவன், அம்பாள், முருகன்,நவக்கிரகம்,வைரவர் ஆலயங்களுக்கும் கும்பாபிசேகம் நடைபெற்றது.

அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு புதன்கிழமையும் நேற்று வியாழக்கிழமையும் நடைபெற்று இன்று மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது.

பஞ்சகுண்டங்களில் யாகம் நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு பிரதான கோபுரம் மற்றும் பரிபாலன ஆலயங்கள் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்;ந்து இராஜகோபுரமாக அமைக்கப்பட்ட 64 அடி உயிரமான வலம்புரி விநாயகர் சிலைக்கு விமானப்படையின் உலங்கு வானூர் மூலம் மலர்ச்சொறிய பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ கும்பாபிசேகம் நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வின்போது வானத்தில் தேசரிஸிகள் என போற்றப்படும் பருந்துகள் ஆலய கோபுரங்களை வலம் வந்தது சிறப்பம்சமாகும்.