“மாறுவோம் மாற்றுவோம் “ வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவர்களின் பொலித்தின் பாவனையினை தடுக்கும் நிகழ்வு

(லியோ)

இலங்கையின் இருந்து முற்றாக  பொலித்தின் பாவனையினை முற்றாக ஒழிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டத்தின் ஒரு நிகழ்வு  இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது


மட்டக்களப்பு மாநகர சபையினால் மட்டக்களப்பில்   பொலித்தின் பாவனையினை முற்றாக ஒழிக்கும் திட்டத்தினை  நடைமுறைப்படுத்தி வருகின்ற நிலையில் மட்டக்களப்பு வின்சென்ட்  மகளிர் தேசிய பாடசாலை மாணவர்களினால் “மாறுவோம் மாற்றுவோம் “  எனும் தொனிப்பொருளில் பொலித்தின் பாவனையினை  தடுக்கும் நடவடிக்கையின் ஒரு நிகழ்வு  பாடசாலை அதிபர் திருமதி . ஆர் கனகசிங்கம் தலைமையில் இன்று மட்டக்களப்பு பொதுச்சந்தையில் இடம்பெற்றது  .

.இந்நிகழ்வில்  அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் . உதயகுமார் , பிரதி ஆணையாளர் என் . தனஞ்செயன் ,மட்டக்களப்பு மத்திய சுற்றாடல் அதிகாரசபை  பொறுப்பதிகாரி  எஸ் .உதயராஜன் ,மட்டக்களப்பு கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் ( கல்வி அபிவிருத்தி )  திருமதி . சிவசங்கரி கங்கேஸ்வரன் , மட்டக்களப்பு பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் . திருமதி . ஆர் பாஸ்கரன்  மற்றும் மட்டக்களப்பு  வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் ,கோட்டமுனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் . 

பொலித்தின் பைகளுக்கு மாற்றிடான பை அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்களும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன .

அத்துடன் பொதுச்சந்தை பகுதியில் பொலித்தின் பாவனையினை தடைசெய்யும் வகையில் மாற்றிடான பைகள்  மாணவர்களினால் விற்பனை செய்யப்பட்டது .

இந்நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மட்டக்களப்பு மாநகர பொது சந்தை பகுதியில்  பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொலித்தின் பாவனையினை முற்றாக தடை செய்யும்  திட்டத்தினை  நடைமுறைப்படுத்திய போதிலும் அந்த செயல்பாடு இருவரையிலும் செயல்படுத்தப்படவில்லை.


 எனவே இதனை  மட்டக்களப்பு மாநகர பொது சுகாதார பரிசோதகர்களும் மற்றும் பொது சந்தைக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களும் இணைந்து மக்களுக்கு பிரச்சினைகளை தரக்கூடிய இந்த பொலித்தீன் பாவனையினை முற்றாக இந்த பிரதேசத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது




























.