மட்டக்களப்பு சிறைச்சாலையில் விசேட திருப்பலி

(லியோ)

உயிர்த்த ஞாயிறு விசேட  திருப்பலி  இன்று மட்டக்களப்பு  சிறைச்சாலையில்  இடம்பெற்றது .


உலகில்  உள்ள  அனைத்து கிறிஸ்தவர்கள்  இன்று  பாஸ்கா  பண்டிகையை கொண்டாடுகிறார்கள்

இயேசுபிரான்  மானிடர்களின்  மீட்புக்காக  பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு  மரித்து   மூன்றாம்  நாள்  உயிர்த்தெழுந்தார்.  அவர் உயிர்த்தெழுந்த  இந்த நாளை  உலகில்  உள்ள  கிறிஸ்தவர்கள்  உயிர்த்த ஞாயிறு  தினமாக இன்று  பாஸ்கா  பண்டிகையை  கொண்டாடுகிறார்கள்

பாஸ்கா  பண்டிகையை  முன்னிட்டு   இன்று   நாடெங்கிலும் உள்ள கிறிஸ்தவ  தேவாலயங்களில்  விசேட  திருப்பலி  ஆராதனைகள்  இடம்பெற்றது .


மட்டக்களப்பு  மாட்டத்தில்  உள்ள  அனைத்து  கிறிஸ்தவ  தேவாலயங்களிலும்   இன்று  விசேட  திருப்பலி  ஆராதனைகள் இடம்பெற்றன

மட்டக்களப்பு  சிறைச்சாலை பிரதான அத்தியட்சகர்  கே .எம் .யு .எச்  அக்பர்  வழிகாட்டலின் இன்று  காலை 09.30 மணியளவில் மட்டக்களப்பு மறை மாவட்ட  ஆயர்  பொன்னையா  ஜோசப்  ஆண்டகை  தலைமையில் விசேட  திருப்பலி  மட்டக்களப்பு  சிறைச்சாலையில்  இடம்பெற்றது .

சிறைச்சாலையில்   இடk;பெற்ற  பாஸ்கா   விசேட திருப்பலியில் சிறைச்சாலை  அதிகாரிகள்  மற்றும்  கைதிகளும்  கலந்துகொண்டனர் .

திருப்பலியின் பின் மட்டக்களப்பு  மறை  மாவட்ட  ஆயர்  பொன்னையா ஜோசப்  ஆண்டகையினால் உயிர்த்த ஞாயிறு  தின  வாழ்த்துக்கள் கைதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.