மட்டக்களப்பு உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

உயர்தேசிய டிப்ளோமா பாடநெறியை பூர்த்திசெய்த மாணவர்களை முதன்முதலில் அரச சேவைக்குள் உள்வாங்கிய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்திற்கு புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டார்.

சுpறப்பு அதிதிகளாக இலங்கை உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் பிரதி பணிப்பாளரும் உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருமான எம்.நசீர்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த கல்வி ஆண்டுக்கான உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா,உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா,உயர் தேசிய தொழில்நுட்ப கல்வி ஆகியவற்றுக்கான மாணவர்களே இதன்போது உள்ளீர்க்கப்பட்டனர்.

பகுதி நேரம் மற்றும் முழு நேரமாக நடாத்தப்படும் இந்த பாடநெறிக்கு சுமார் 500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர்,
புல்கலைக்கழகங்களில் பாடவிதானங்களுடன் கற்றல்செயற்பாடுகள் உள்ள காலகட்டத்தில் பாடவிதானங்கள் மட்டுமன்றி செயன்முறையூடாகவும் புலமைத்துவமுடையவர்களாக இந்த நிறுவகத்தில் இருந்து மாணவர்கள் வெளியேறிவருகின்றனர்.

இதில் இருந்து வெளியேறிச்செல்வோர் தொடர்பிலான திறமைகளை மாவட்ட செயலகம் நேரடியாக கண்டுள்ளது.மிக முக்கியமான பதவிகளில் எச்.என்.டி.ஏ(உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா)மாணவர்களை உள்வாங்கியுள்ளோம்.கணக்காய்வு உட்பட மிக முக்கியமான பணிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.