News Update :
Home » » வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் நிலையில் கிழக்கில் அபகரிப்புகள் மேற்கொள்ளபடுகின்றது –பிரசன்னா இந்திரகுமார்

வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் நிலையில் கிழக்கில் அபகரிப்புகள் மேற்கொள்ளபடுகின்றது –பிரசன்னா இந்திரகுமார்

Penulis : kirishnakumar on Tuesday, March 15, 2016 | 10:40 AM

வடக்கில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில் கிழக்கில் காணி அபகரிப்புகளுக்கான முன்nடுப்புக்கள் இடம் பெறுவதாக கிழக்கு மாகாண சபையின் ;பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்  குற்றஞ்சாட்டுகின்றாh.
இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு நொச்சிமுனைப்பகுதியில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே பிரதி தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

துமிழ் மக்கள் இன்று ஒரு புதிய ஆட்சியை இந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த ஆட்சி மாற்றத்திற்கு பெரும் பங்காற்றியவர்கள் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள்.ஆனால் ஆட்சி மாற்றத்திலும் தமிழர்களின் வாழ்வில் எதுவித மாற்றங்களும் ஏற்படாத நிலையே இருந்துவருகின்றது.

இத்தகைய செயல்படுகளினால் நல்லாட்சியில்  வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ள தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களும் வலுப்பெற்றுவருகின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தினை விட இன்றைய ஆட்சிக்காலத்தில் பாரிய துரோகங்கள் தமிழர்களுக்கு இழைக்கப்படுகின்றன.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு பெரும் துரோகங்கள் ஆட்சியாளர்களினால் இழைக்கப்படுகின்றன.

முhற்றத்திற்காக வாக்களித்து வெற்றிபெறச்செய்த மக்களை புறந்தள்ளும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றது.மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர்கள் பதவியல் பெரும் துரோகம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது.

அதேபோன்று இன்று காணி அபகரிப்புகளும் திட்டமிட்ட வகையில் இந்த அரசாங்கம் மேற்கொண்டுவருவதை அண்மைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

வுடக்கில் காணிகளை விடுவிப்பதாக காட்டிக்கொண்டு கிழக்கில் சத்தம் இல்லாமல் காணி அபகரிப்பு பணிகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.கிழக்கில் பல அரச,தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டு படைமுகாம்களை நிரந்தரமாக அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

குறிப்பாக எமது மாவட்டத்தில்; களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குரிய காணியை விசேட அதிரடிப்படையினருக்கு வழங்குமாறு  உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த  அரசாங்கத்தின் பதவிக் காலத்திலும் இது போன்ற உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்ட போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மேற்கொண்ட முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.இன்று மீண்டும் அதனை விசேட அதிரடிப்படையினருக்கு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்த விசேட அதிரடிப்படையினருக்கு வழங்குவதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளதாக எம்மால் அறியக் கூடியதாக இருந்தாலும் ஆள் மாறி ஆள் குற்றங்களை சுமத்தி அவர்கள் மக்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள பார்க்கின்றார்கள்.

ஆளும் தரப்பு அரசியல் வாதியொருவரும் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளார். அவரை மக்கள் தான் இனம் காண வேண்டும்;.மக்களின் காணிகளை புடுங்கி வழங்க ஆதரவு வழங்கும் இவர்கள் மக்கள் தொடர்பில் சிந்திக்கமாட்டார்கள்.தமது சுயநலத்திற்காகவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 களுவாஞ்சிகுடி நகரம் இன்று நகரமயமாக்களுக்கு உட்பட்டுவருகின்றது. இதன்காரணமாக அப்பகுதியில் பாரிய இடநெருக்கடிகளுக்கு உள்ளாகும் நிலையேற்படும்.இவ்வாறான நிலையில் நகரின் மத்தியில் உள்ள காணியை விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கவேண்டிய எதுவித தேவையும் இல்லை.

இன்று இந்த நாட்டில் யுத்;தம் முடிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுவரும் வேளையில் இவ்வாறு மக்களின் காணிகளை பறித்து படைமுகாம்கள் அமைப்பதற்கான நோக்கம் என்ன என்பது தொடர்பில் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் மக்களின் காணிகளில் உள்ள படைமுகாம்கள் அகற்றப்படவேண்டும்.மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்.அவ்வாறு இல்லாமல்போனால் மக்கள் அணி திரட்டி வீதியில் இறங்கவேண்டிய கட்டாயம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்படும்.
Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger