யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு பயிற்சிகள்

(லியோ)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின்  வாழ்வாதாரத்தை விருத்தி செய்யும் நோக்குடன் புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங்களை முன்னெடுத்து  வருகின்றன .


இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு பயிற்சிகள் வழங்கும்கருத்தரங்கு   மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் புனர்வாழ்வு அதிகாரசபை நிறைவேற்று பணிப்பாளர் என் . புவனேந்திரன் தலைமையில் இன்று இடம்பெற்றது .

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்களிளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்காக  புனர்வாழ்வு அதிகாரசபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மெழுகுதிரி உற்பத்தி சம்பந்தமான பயிற்சி வழங்கும் கருத்தரங்கில் 20  குடும்ப பெண்கள் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் . கிரிதரன் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் . நெடுஞ்செழியன் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா , மாவட்ட செயலக புனர்வாழ்வு அதிகாரசபை உதவியாளர்  இ . தினேஸ்குமார் , மண்முனை வடக்கு விதாதா வள நிலைய விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தர்  திருமதி . என் .வளர்மதி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்களிளினால் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்கள் கலந்துகொண்டனர் .