ஸ்ரீ கல்கி பகவான் 68வது ஜென்ம தினம் நிகழ்வுகள்

(லியோ )

ஸ்ரீ கல்கி பகவான் 68வது  ஜென்ம தினம் நிகழ்வுகள் மட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்றது .


மட்டக்களப்பு – அம்பாறை கல்கி தர்மா ஏகத்துவ அமைப்பின் ஏற்பாட்டில்  ஸ்ரீ கல்கி பகவான்  68 ஜென்ம தினம் நிகழ்வுகள் மிக சிறப்பாக 07.03.2016 மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது .

07.03.2016  காலை  09.00 மணிக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி பால்குட பவணி  பிரதான வீதி ஊடாக  மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தை வந்தடைந்தது . 

அதனை தொடர்ந்து   ஸ்ரீ கல்கி பகவான் 68வது  ஜென்ம தின நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது . தொடர்ந்து  விசேட  கலை நிகழ்வுகளும் 68 விசேட திரவியங்கள் கொண்டு சிறப்பு  விநாயகர் பூசை வழிபாடுகளும் பாதுகை அபிஷேகமும்   இடம்பெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு – அம்பாறை ஸ்ரீ கல்கி தர்மா ஏகத்துவ அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர் .