களுவாஞ்சிகுடியில் சதோச விற்பனை நிலையம் திறந்துவைப்பு

ஆறு மாத காலத்திற்குள் சதோச நிலையங்களை இலாபமீட்டும் நிலையமாக மாற்றும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

பொதுமக்கள் குறைந்த விலையிலும் தரமானதாகவும் பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் நாடளாவிய ரீதியில் சதோச விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுவருகின்றன.

கிழக்கு மாகாணத்தின் முதலாவது சதொச விற்பனை நிலையம் நேற்று ஞாயிற்றுக் கிழமை (28 களுவாஞ்சிகுடியில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இப்பிரதேச மக்கள் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவுசெய்யும் வகையில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பானர் சோ.கணேசமூர்த்தி விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நிறுவகம் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன், கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீரலி, , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், கிராம பெரியோர்கள், என ஏராளமான பொதுமக்களும் காலந்து கொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் இலங்கையில் உள்ள சதோச விற்பனை நிலையங்கள் பாரிய நடத்தில் இயங்கிவந்தன.வருடாந்தம் சுமார் 15கோடி ரூபா நடத்தினை காட்டிவந்தது.எனினும் புதிய ஆட்சியின் கீழ் அதனை கடமையேற்று ஒரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் 10கோடி ரூபா இலாபம் அதிகரித்துள்ள நிலையில் ஐந்து கோடி ருபாவே நஸ்டம் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆறு மாதங்களில் சதோச விற்பனை நிலையங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்படும்.பொதுமக்கள் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவுசெய்யவும் தரமான பொருட்களை கொள்வனவுசெய்யவும் இந்த நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் எதிர்வரும் பத்து மாத காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 180 சதோச விற்பனை நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து சதோச விற்பனை நிலையங்கள் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.