“ தூரிகையின் தூறல்கள் “ தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரி முகிழ் நிலைப்பயிலுனர்களின் ஓவியக் கண்காட்சி


 மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரி சித்திரப்பாட நெறி முகிழ் நிலைப்பயிலுனர்களின் ஓவியக் கண்காட்சி 29.02.2016ஆம் திகதி தொடக்கம்  01.03.2016ஆம் திகதி வரை  கல்லூரியில் இடம்பெறவுள்ளது . 


மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் வருடந்தோறும் நடாத்தப்படும் சித்திரப்பாட நெறி முகிழ் நிலைப்பயிலுனர்களின் “ தூரிகையின் தூறல்கள் “ஓவியக் கண்காட்சி தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதி எஸ் .ராஜேந்திரன் தலைமையில் இன்று கல்லூரியில் ஆரம்பமானது  .

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய பயிற்சி கலாச்சாலை  அதிபர் எ .எஸ் . யோகஜாரா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக  கல்விவியும் தரம் மேம்பாடும் உப பீடாதிபதி  திருமதி எம் .புவனேஸ்வரி ,நிதியம் நிர்வாகமும் எஸ் . ஜெயகுமார் ,தொடருறு  கல்வி உப பீடாதிபதி ஜுனைட், சித்திரபாட விரிவுரையாளர் சி .கதாரதன் மற்றும் சித்திரப்பாட நெறி ஆசிரியர்ப் பயிலுனர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

ஆரம்ப நிகழ்வாக நெறி முகிழ் நிலைப்பயிலுனர்களினால்   அதிதிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஓவியக் கண்காட்சி கூட்டத்தினை  அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது .

 மனிதனின் வாழக்கை வட்டத்தையும் , அவனது இயல்பு குணங்களையும் , இயற்கை காட்சியினையும் மையப்படுத்தி ஓவியமாக தமது ஆற்றல்களை வெளிபடுத்தியுள்ள  தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் இரண்டாம் வருட நெறி முகிழ் நிலைப்பயிலுனர்களின்  ஓவியக்  காட்சியினை பார்வையிட்டனர் .

இந்த நிகழ்வில்  பீடாதிபதிகள் , விரிவுரையாளர்கள் , சித்திரப்பாட நெறி முகிழ் நிலைப்பயிலுனர்கள்  மற்றும்  இப்பகுதி பாடசாலைகளின்  மாணவர்கள் ,ஆசிரியர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில் உரையாற்றிய கல்லூரி  பீடாதிபதி  தெரிவிக்கையில் மனிதர்கள் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில்  வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் . இவ்வாறான நிலையில் இந்த  நுண்கலைகள் மனிதனின் அமைதிக்கு மிக அவசியமான ஒரு கலையாக உள்ளது .

இந்த ஓவியகாட்சியின் மூலமாக உலகத்தில் உள்ள பிரச்சினைகள் ,நமது நாட்டில் ,பிரதேசத்தில் மற்றும் சமூக மட்டத்தில்  இருக்கின்ற மக்களின் பிரச்சினைகள்  சரியான முறை விளங்கி கொள்வதற்கு இவ்வாறான கலைபடைப்புகள் அவசியமானது .

கலைஞ்சனுக்கு பல சமூக பொறுப்புக்கள் உண்டு எனவே இந்த சித்திரப்பாட பயிலுனர்கள் ஓவிய கலையினை திறன்பட கற்று இந்த நாட்டிலே இருக்கின்ற மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் போது சிறந்த சமூகத்தையும் ,சிறந்த கலைஞ்சனையும் உருவாக்க முடியும் .

அதற்கான முதல் படிகற்களாக அமையபெற்ற இந்த ஓவியக் கண்காட்சி சிறப்பாக முறையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த பீடாதிபதி நெறி முகிழ் நிலைப்பயிலுனர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார் .