புனித மைக்கேல் கல்லூரியின் வீதி மரதன் ஓட்ட நிகழ்வு


இலங்கையின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மாணவர்களின் வீதி மரதன் ஓட்ட நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

புனித மைக்கேல் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு இந்த வீதி ஓட்ட நிகழ்வு நடைபெற்றது.

புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார்,ஜேசுசபை துறவியும் பாடசாலையின் பழைய மாணவரும் புகழ்பெற்ற ஓட்ட வீரருமான அருட்தந்தை ரி.சகாயநாதன்,புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளை தலைவர் கே.லக்ஸ்மன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வீதி மரதன் ஓட்ட நிகழ்வில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதுடன் பாடசாலை முன்பாக நிகழ்வு ஆரம்பமானது.

இந்த வீதி மரதன் ஓட்டமானது பஸ் நிலையம் ஊடாக வெள்ளைப்பாலம் ஊறணி திருமலை-கல்முனை வீதி,புகையிரத நிலைய வீதி அரசடிசந்தி,கல்முனை-மட்டக்களப்பு வீதி ஊடாக பாடசாலையினை வந்தடைந்தது.