மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளுக்கான தொழில் பயிற்சி வழங்கும் நிகழ்வு


(லியோ )

சிறைச்சாலை கைதிகளுக்கான  தொழில் பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்று  மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது .

 மட்டக்களப்பு  சிறைச்சாலை பிரதான அத்தியட்சகர்  கே .எம் .யு .எச்  அக்பர்  வழிகாட்டலின் மட்டக்களப்பு மாவட்ட பேரன்டினா நிறுவன நிதி அனுசரணையில்  இலங்கை தொழில்  பயிற்சி  அதிகார சபையின்  உதவியுடன்    பிரதான  செயலர்  எம் .பிரபாகரன் தலைமையில்  மட்டக்களப்பு  சிறைச்சாலையில் சிறு குற்றத்திற்காக  தண்டனை வழங்கப்பட்டுள்ள கைதிகளுக்கான தொழில் பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .  

இந்த பயிற்சியானது  சிறைச்சாக்ளைக்குள் இருந்துகொண்டு எவ்வாறு தொழில்களை பயின்று கொள்வதும் அதேவேளை சிறைச்சாலையை விற்று விடுதலையாகி சமூகத்துக்கு செல்லும் போது எப்படி ஆரோக்கியமான மனிதர்களாக வெளியில் செல்வது என்றும் சமூக படுத்திய பின் எவ்வகையான தொழில்களை பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றியும் , வெளியில் சென்ற பின் தொழிலை பெற்றுக்கொள்ள யாரை ,யாரை நாடவேண்டும் , எந்த இட்டங்களில் சந்திக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்களையும் பூரண விளக்கங்களையும் இந்த தொழில் பயிற்சி நெறியின் போது பயிற்சிகள் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் உரையாற்றிய சிறைச்சாலை பிரதான ஜெயிலர் எம் .பிரபாகரன் தெரிவிக்கையில் தற்போது சிறைச்சாலை திணைக்களம் என்பது புனர்வாழ்வு திணைக்களமாக மாற்றம் பெற்றுகொண்டிக்கின்றது .

புனருத்தாபனம் என்பது சிறைச்சாலையின் முதல் கருத்தாக மாறிக்கொண்டுவருகின்றது ,  ஆரம்ப காலத்தில் இத்திட்டம் பாதுகாப்பு ,கவனித்தல் , திருத்தி அமைத்தல் என்ற செயல்பாட்டில் இயங்கி வந்துள்ளது .

அண்மைக்காலங்களில் பாதுகாப்பு பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் புனர்வாழ்வு என்பது தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது .

அந்த வகையில் பாதுகாப்பு ,கவனித்தல் , திருத்தி அமைத்தலுக்கான  நிறுவனத்தினால்  சிறைச்சாலையில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு மேசன் தொழில் நுட்பத்தை  கற்பிக்கப்படுகின்றது .

இலங்கையில் உள்ள 27  சிறைச்சாலைகளில் கற்பிக்கின்ற இந்த மேசன் தொழில் நுட்ப பயிற்சிநெறிகளில்   மட்டக்களப்பு மாவட்டடத்தில் உள்ள சிறைச்சாலை மூன்றாம் தரத்தில் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிப்பதாக தெரிவித்துக்கொண்டார் .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான செயிளர்  எம் . பிரபாகரன் , பேரன்டினா நிறுவன மாவட்ட  முகாமையாளர்  எஸ்  .தினேஷ் ,  இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை மாவட்ட உதவி பணிப்பாளர் . எம் .பி .நளீம் , சிறைச்சாலை புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் .பி . சுசிதரன் , எல் ஜெ . சுதாகரன்   மற்றும் சிறைச்சாலை  தண்டனை கைதிகள் கலந்துகொண்டனர் .