மாமாங்கம் ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் சிரமதான பணிகள்

(என்டன்)

மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன்  ஆலய வளாகத்தில் மட்டக்களப்பு பொலிசாருடன் மாமாங்க கிராம மக்களும் இணைந்து   சிரமதான பணிகள்  மேற்கொள்ளப்பட்டன.


மட்டக்களப்பு பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி ஹெட்டியாராச்சி வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு பொலிசாருடன் மாமாங்க கிராம சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ,மாமாங்க கிராம பொதுமக்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினரும் இணைந்து ஆலய வளாகத்தினை துப்பரவு செய்யும் பணிகளை மேற்கொண்டனர் .


இடம்பெற்ற சிரமதான பணியில் பாலமீன்மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்புலாகல , ,மக்கள் தொடர்பாடல் பொலிஸ் அதிகாரி எச் .எம் .சியாம் , கிராம சேவை உத்தியோகத்தர் என்டன் ஜெபஸ் , சிவில் பாதுகாப்பு குழு தலைவர் எம் . உதயராஜ் மற்றும் மாமாங்க கிராம பொது மக்கள் கலந்துகொண்டனர் .