நாட்டில் இருள் அகன்று முழு நாடும் ஒளிமயம் தேசிய மின்வழங்கல் செயல்திட்டம் ஆரம்பம்

( என்டன் )

நாடளாவிய ரீதியில் மின்சார வசதிகள் இன்றி உள்ள  அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.



நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இருள் அகன்று முழு நாடும் ஒளிமயம் தேசிய மின்வழங்கல் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்டஅரசாங்க அதிபர் திருமதி .  பி .எஸ் .எம் .சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது .


மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்தில்  அமைச்சர் உரையாற்றிகையில்  மின்சார வசதியின்றியுள்ள சகல கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை எமது அமைச்சினூடாக இலங்கை மின்சாரசபை முன்னெடுத்துள்ளது.

இலங்கையில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளாதவர்கள் அதிகளவில் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரம் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் 25,000 பேர் உள்ளனர் . இவர்களில் 2,080 பேர்  கிராமமட்டத்தில் உள்ளனர் .
இந்தத் திட்டத்தின் கீழ்  நாட்டில் உள்ள சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.

தற்போது முன்னெடுக்கப்படவுள்ள  வேலைத்திட்டத்தில் பிரதேச செயலகம் ஊடாக விண்ணப்படிவங்களை  வழங்கப்பட்டு, விண்ணப்பப்படிவங்கள் கிராம அலுவலர் ஊடாக மின் இணைப்பு இல்லாதவர்கள் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து கிராம அலுவலர்களிடம் கையளிக்க வேண்டும்.

இதன் பின்னர் அந்த விண்ணப்பப்படிவங்களை பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து  பிரதேச மின் பொறியியலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்கள் இணைந்து வீடுகளுக்கு மின்சாரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இந்த திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளாயினும் தற்காலிக வீடுகளாயினும் சரி சகல  வீடுகளுக்கு மின் இணைப்புகள்  வழங்கப்படும்.

இதன் பின் நாட்டில் சகல வீடுகளும் மின்சாரம் இல்லாத வீடுகளாக மாற்றப்படும் என இன்று இடம்பெற்ற மீளாய்வுக்கூட்டத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் தெரிவித்தார் .

 இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மீளாய்வுக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள் . மாவட்ட பிரதேச செயலாளர்கள் , சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .