அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது .

(என்டன் )
புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம்  தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .

 மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட்  நிறுவக அனுசரணையில்  டயக்கோனியா நிறுவன நிதி உதவியுடன்   மட்டக்களப்பு இணையம் நிறுவன ஏற்பாட்டில் புதிய யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்களுக்கு தெளிவு படுத்தலும், கலந்துரையாடலும்  இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது .

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமர்வுகள் எதிர்வரும் 25ஆம்  26 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது .

இதனை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது .

 அரசியல் யாப்பு என்பது இதுவரை காலமும் படித்த பட்டதாரிகள் ,வல்லுனர்கள் மூலமாக எழுதப் பட்டவையாக இருந்தது  .

இதனை மாற்றி பாமர மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தற்போதைய அரசியல் யாப்பினை  இவர்களின்  கருத்துக்கு இணங்க மாற்றும் நோக்குடனான கலந்துரையாடலில் பாமர மக்களையும் உள்ளடக்கியதாக இந்த கலந்துரையால் இன்று இடம்பெற்றது .


இந்த கலந்துரையாடலில் வளவாலர்களாக எல் .எஸ் .டி . நிறுவக சட்ட ஆலோசகர் கே .ஐங்கரன் , இணையம் நிறுவன ஆலோசகர் எ .சொர்ணலிங்கம்  , எகெட் நிருவாக உறுப்பினர்கள் மற்றும்  வவுணதீவு ,பட்டிப்பளை , செங்கலடி- ஏறாவூர் பற்று ,  ஆரையம்பதி , எருவில் பற்று  ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட    பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களும் , பொதுமக்களும்   , சர்வமத தலைவர்களும் கலந்துகொண்டனர் .