கிழக்கு மாகாணம் 2015 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்

(லியோன் )


கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக மொபிடல் பிரதான அனுசரணையில் தினக்குரல் நடாத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கௌரவிக்கும்  கல்விச் சங்கமம் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .

மொபிடல் பிரதான அனுசரணையில் தினக்குரல் நடாத்தும் தினக்குரல் கல்விக்குரல் தொடர்மாதிரிப் பரீட்சையில் பங்கு பற்றி தேசிய ரம் ஐந்து புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 389 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ,மாணவர்களுக்கு கற்பித்த கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வும்  தினக்குரல் முகாமைத்துவப் பணிப்பாளர் பொ. கேசவராஜா தலைமையில் இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  .திருமதி பி ,எஸ் எம் .சார்ள்ஸ், சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் ..உதயகுமார் மற்றும் கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர்கள் ,உதவி கல்விப் பணிப்பாளர்கள் , மொபிடல் நிறுவன  தொடார்பாடல்  முகாமையாளர்  ஜுட் சில்வா , சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்  காஞ்சன சமரசிங்க ,கிழக்கு பிராந்திய முகாமையாளர் தர்மேந்திரா , கிளைமுகாமையாளர் றோசான் முயுடின் ஆகியோர் கலந்துகொண்டனர் ,


இன்று இடம்பெற்ற கல்விச் சங்கமம் நிகழ்வில் தேசிய தரம் ஐந்து புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 389   மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டது . இதேவேளை இவர்களுக்கு  கற்பித்த கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .