09 வது தேசிய சாரணர் ஜம்போரி கில்வெல் இம்முறை யாழ்பாணத்தில் இடம்பெறவுள்ளது

(என்டன் )

2016 ஆம் வருடத்திற்கான சாரணர்களின்  ஜம்போரி கில்வெல் ஒன்று கூடல் நிகழ்வு இம்முறை யாழ்பாணத்தில் இடம்பெறவுள்ளது .


 இலங்கையின் 09 வது  தேசிய சாரணர் ஜம்போரி கில்வெல் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர் வரும் 21ஆம் திகதி யாழ்பாணம் மத்திய வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது . 

இந்நிகழ்வினை  பிரதிநிதித்துவப்படுத்தி  மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து  360  சாரணர்களும் 40 சாரண ஆசிரியர்களும்  கலந்துகொள்ளவுள்ளனர் .

இந்நிகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட  சாரணர்களுக்கு தெளிவூட்டல்  நிகழ்வு  இன்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில்  மாவட்ட சாரணர் ஆணையாளர் இ ,பி . ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்றது .

நடைபெறவுள்ள  09 வது  தேசிய சாரணர்கள் ஜம்போரியில் சாரணர்களின் செயல்பாடுகள் தொடர்பான தெளிவூட்டல்களும் ஜம்போரி கில்வெல் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளவுள்ள மட்டக்களப்பு மாவட்ட சாரனர்களுக்கான சின்னங்களும் , அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது . 


இந்நிகழ்வில் மாவட்ட  சாரணியர் உதவி  ஆணையாளர்  எ . குணரெட்னம் , சாரணர் உதவி ஆணையாளர் . வி .பிரதீபன் , மாவட்ட சாரணர் நிகழ்ச்சி உதவி ஆணையாளர் . ஐ .கிறிஸ்டி , மாவட்ட சாரணர் ஊடக உதவி ஆணையாளர் எ . உதய குமார் , மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையாளர்  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சாரணர்களும் கலந்துகொண்டனர் .