கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு

(லியோன்)

2016 ஆம்  ஆண்டு கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக  நாடளாவிய ரீதியாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் அனைத்து பாடசாலைகளிலும் தற்போது  இடம்பெற்று வருகின்றது .

இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது..

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் ஆர் .இராசு தலைமையில் இடம்பெற்றது .

நிகழ்வில் தரம் 02 மாணவர்கள்  முதலாம் தரத்திற்கு  வருகை தந்த புதிய மாணவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மாணவர்களின்  வரவேற்பு கலை நிகழ்வுகளும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது  .

இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஷ்ண  மிஷன் வணக்கத்துக்குரிய  ஸ்ரீமத்சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார் .
அதிதிகளாக  உதவிக் கல்விப் பணிப்பாளர்  ஆர் .பாஸ்கரன் (ஆரம்பப் பிரிவு )   ஓய்வு நிலை அதிபர் திருமதி டி . அருட்ஜோதி ,  உலக நண்பர்கள் அமைப்பின் தலைவர் கங்காதரன் ,உளவளத்துறை உத்தியோகத்தர் டி . பிரான்சிஸ் மற்றும் பாடசாலை , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .

இதன்போது சமூக மேம்பாட்டு கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.