இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

(லியோன் )

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இன்று காலை பத்து மணியளவில் மட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் கோவில் வீதியில்  ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கில்கள்  ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார்  தெரிவிக்கின்றனர் .

இடம்பெற்ற விபத்தின் போது  மோட்டார்   சைக்கில்களில் பயணித்த  மூவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் . 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர் .