புதிய அரசின் எதிர்கால வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்


(லியோன் )


புதிய அரசின் எதிர்கால வேலைத்திட்டங்களின் கீழ் உரிய அமைச்சின் ஊடாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துக்கொண்டார்.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட காந்திகிராமம் , சின்னஊறணி , பாரதி கிராமம் ,நாவக்கேணி  ஆகிய கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . வியாலேந்திரன் இன்று  இக்கிராம பகுதி மக்களை சந்திக்க  விஜயத்தினை மேற்கொண்டார் .

இந்த விஜயத்தின் போது இக்கிராம மக்கள்  தாம் எதிர் நோக்குகின்ற அடிப்படை பிரச்சினைகளான  சுகாதார , நீர் , வீதி கட்டமைப்பு , வடிகான்கள் ,இருப்பிட வசதி ( வீடு ) வாழ்வாதாரம்  போன்ற பல்வேறுபட்ட  பிரச்சினைகளை  பாராளுமன்ற உறுப்பினருக்கு முன்வைத்தனர் .

இவைகளை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .வியாலேந்திரன் கருத்து தெரிவிக்கையில்   இந்த கிராம பகுதியில் சுமார் 400 மேற்பட்ட குடும்பங்கள் பல வருட காலமாக எதுவித அடிப்படை வசதிகள் இன்றி பின்தங்கிய நிலையில் வசித்து வருகின்றனர் .

இன்று இக்கிராம மக்கள் முன்வைத்த இந்த அடிப்படை கோரிக்கைகளை உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கான உரிய தீர்வினை எதிர்கால வேலைத்திட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துகொண்டார் .