கல்வியினால் மட்டுமே தமிழர்கள் இழந்ததை பெறமுடியும் -வியாழேந்திரன் எம்.பி.

கல்வியினால் மட்டுமே தமிழ் மக்கள் இழந்தவற்றினை அடையமுடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,செங்கலடியில் உள்ள அலுவலகத்தில் வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கஸ்ட நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஒன்றை இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்துள்ளார்.

தனது சொந்த நிதியில் இந்த திட்டத்தினை ஆரம்பித்துள்ளதுடன் இதன் முதல் கட்டமாக ஏறாவூர் மற்றும் செங்கலடி பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

இன்று தமிழ் மக்கள் மத்தியில் கல்வி நிலையில் எழுச்சியான நிலையேற்பட்டுள்ளது.இந்த நிலையினை மேம்படுத்தவேண்டியதேவையுள்ளது.நாங்கள் இன்னும் கடந்த கால நிலைமையினை பேசிக்கொண்டு பின்நோக்கி செல்லமுடியாது.நாங்கள் முன்நகரவேண்டிய தேவையுள்ளது.

தமிழ் மக்களுக்கு இன்று சிறந்த ஆயுதமாக இருப்பது கல்வியாகும்.இன்று சமூகங்கள் ரீதியில் போட்டி ரீதியான நிலை கல்வியில் உருவாகியுள்ளது.நாங்கள் கல்வியை பலப்படுத்துவதன் மூலமே நாங்கள் இழந்தவைகளை மீளஅடையமுடியும்.அதனை உணர்ந்து அனைவரும் பணியாற்றவேண்டும் என்றார்.