நாவற்கேணி மென்கெப் விசேட தேவையுடைய மாணவர்களின் பாடசாலையின் பத்தாவது ஆண்டு தின நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு நாவற்கேணி மென்கெப் விசேட தேவையுடைய மாணவர்களின் பாடசாலையின் பத்தாவது ஆண்டு தின நிகழ்வுகள்  இன்று நாவற்கேணி மென்கெப் பாடசாலையில் இடம்பெற்றது .


நாவற்கேணி மென்கெப் விசேட தேவையுடைய மாணவர்களின் பாடசாலையின் பத்தாவது ஆண்டு தின நிகழ்வுகள் பாடசாலையின் ஸ்தாபகர் கிறிஸ்தோபர் ஸ்டப்ஸ் தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது .

ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது . இதனை தொடர்ந்து பத்தாவது ஆண்டு தின நிகழ்வாக கேக் வெட்டும் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து  விசேட தேவையுடைய மாணவர்களின் வரவேற்பு நிகழ்வுகளுடன் பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது  .


இந்நிகழ்வில்  அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன் , மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா , மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்  எஸ் .அருள்மொழி , கிராம சேவை உத்தியோகத்தர் எ .நேசதுரை , மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பாடசாலை மாணவர்கள் , மாணவர்களை பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .